பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 12?

விட்டுத் திரும்பிய பொழுதுகளில் அவள் மனம் நலிந்து வருந்தியது. நல்ல கனவுகளைக் கண்டுகொண்டிருக்கும் போது யாராவது உடனுக்குடன் அடித்துத் தட்டி எழுப்பி விடுகிற மாதிரி அந்தப் பிரிவுகள் அவளை வேதனையுறச் செய்தன. என்னென் னவோ எண்ணினாள் அவள் -

வாழ்க்கையே இப்படித் தொடர்ந்து வழியனுப்பிக் கொண் டிருக்கிற ஒரு சடங்குதான் போலும்? ஊருக்கு வழியனுப்பினால் பிரயாணம் உயிர்களை வழியனுப்பினாலும் அது ஒரு வகைப் பிரயாணம். தோழிகள் ஊருக்குப் போன பின் இரண்டு மூன்று நாட்களுக்கு அவள் உள்ளம் இத்தகைய நலிவுள்ள நினைவு களையே நினைத்தது.

ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்பு களுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும் போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கமாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச்சாவியையும் ஒதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்து விட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விடு வார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்குப் பூரணி நகரத்தி லிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு தாங்களாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார்கள். சில நாட்கள் அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அன்று அவள் இரவில் வீடு திரும்பியபோது தம்பிகள் இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். வழக்கமாக அவள் வருகிற நேரத்துக்குத் துங்கிப்போயிருக்க வேண்டிய குழந்தை மங்கையர்க்கரசி தூங்காமல் விழித்துக் கொண் டிருந்தாள். குழந்தையின் முகம் நெடுநேரம் அழுதாற்போல் iங்கியிருந்தது. கண்கள் சிவந்து கன்னம் நனைந்து ஈரக்கறை தெரிந்தது. பசிச் சோர்வு முகத்தில் தெரிந்தது. பூரணி எங்கே யாவது போய்விட்டு வீடு திரும்பினால் 'அக்கா வந்தாச்சு' என்று வீடெல்லாம் அதிரும்படி உற்சாக மழலைக் குரல் எழுப்பியவாறே துள்ளிக் குதித்தோடி வந்து அவள் கால்களைக் கட்டிக் கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/123&oldid=555847" இலிருந்து மீள்விக்கப்பட்டது