பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 123

'விளையாடறபோது தெருவிலே கீழே விழுந்தியா?" 'இல்லை...' 'பின்னே எதற்காக இப்படி அழவேண்டும் நீ?" 'ஒதுவார் வீட்டிலே அந்தப் பாட்டி கிட்டப் பேசிக் கிட்டிருந் தேன். ஏம் பாட்டி, உங்க காமுவைச் சிவப்பா கழுத்திலே தங்கச் செயின், ருத்திராட்சம் எல்லாம் போட்டுக்கிட்டிருந்தாரே ஒருத்தர், அவரோட இரயில்லே ஏத்தி ஊருக்கு அனுப்பிவிட்டீங்களே இனிமே அவ இங்கே வரமாட்டாளா? - அப்படின்னு கேட்டேன்.'

'நீ அந்தப் பாட்டியைக் கேட்டியா?" "ஆமாம்.' 'ம்ம்; அப்புறம்?' "அதுக்கு அந்தப் பாட்டி சிரிச்சுக்கிட்டே... வந்து... வந்து...!" இதைச் சொல்லும் போது குழந்தை மறுபடியும் விசும்பத் தொடங்கி விட்டாள்.

'அழாமல் முழுவதும் சொல்லு, கண்ணு! நீ சமர்த்துக் குழந்தையில்லையா?”

'உங்க பூரணியக்காவும் ஒருநாள் அப்படித்தான் போவாங்க, பொண்ணுன்னு பொறந்தா என்னிக்காவது ஒரு நாள் இப்படி ஒருத்தரோடு போய்த்தான் ஆவணும். நீ கூட வளர்ந்து பெரிசானா அப்படித்தான்னு அந்தப் பாட்டி சொன்னாங்க..."

பூரணிக்குக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து விட்டால் தான் சொல்லிக் கொண்டு வருகிற விஷயத்தில் குழந்தைக்கு நம்பிக்கை குறைந்து, சொல்வதை நிறுத்தி விடுவாளோ என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு, கேட்டாள்:

'அந்தப் பாட்டிக்கு நீ என்ன பதில் சொன்னே?" 'எனக்கு இதைக் கேட்டதும் அந்தப் பாட்டி மேலே ஒரே கோவமாயிரிச்சு, எங்க பூரணியக்கா ஒண்னும் அப்படியில்லே. என்னிக்கும் எங்களோட தான் இருப்பாங்க, உங்க காமுவுக்குத் தலைமயிர் கொஞ்சம், தெத்திப் பல்லு, குண்டு மூஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/125&oldid=555849" இலிருந்து மீள்விக்கப்பட்டது