பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 குறிஞ்சிமலர் செய்கிறவர்களில் பாவங்களும், நோய்களும் கரைந்து விடு மென்பது பரம்பரையாக இருந்து வரும் முறைமை. பூரணி இரண்டு முடிச்சுக்களை வாங்கி ஒன்றைத் தன் கையால் நீரில் கரைத்துவிட்டு மற்றொன்றை அரவிந்தனிடம் நீட்டினாள். "நீயே கரைத்துவிடு. எனக்கு வேண்டாம். பூரணி! நான் சமூகத்தின் பாவங்களையும் நோய்களையும் கரைத்து விட ஆசைப்படு கிறவன். அவை இந்தச் சிறிய உப்பு முடிச்சைக் கரைப்பதனால் கரைய மாட்டா. அவைகளைக் கரைத்து அழிக்க உயர்ந்த குறிக்கோள்களை வெள்ளமாகப் பெருக்கி வேறோர் இலட்சியக் குளம் தேக்க வேண்டும்' என்று இவ்வாறு சொல்லி அதை மறுத்தான் அரவிந்தன். பூரணி சினம் தொனிக்கும் குரலில், ஆனால் சிரிப்பு நிலவும் முகத்தோடு, “சமுகம், பிரச்சனைகள், ஏழைமை, வறுமை எப்போது பார்த்தாலும் இந்தப் பல்லவி தானா? அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதை யேனும் அளவளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம்?" என்று அவனைக் கேட்டாள்.

'என்ன செய்வது பூரணி? நான் பிறந்த வேளை அப்படி" என பதில் சொல்லிவிட்டு மேலே வெறித்துப் பார்த்தான் அரவிந்தன்.

இப்படி எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளின் மூலம் தான் அரவிந்தனை அவள் புரிந்துகொள்ள முடிந்தது. அவ்வாறு புரிந்து கொள்ளப் புரிந்துகொள்ள அவளுடைய சின்னஞ்சிறு பெண்மனம் அவனுடைய பெரிய மனத்துக்குள் கலந்து கரைந்து கவிந்து ஒடுங்கலாயிற்று.

கோடை விடுமுறையெல்லாம் கழிந்து பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டார்கள். பூரணி, குழந்தை மங்கையர்க்கரசியைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். தம்பிகள் இரண்டு பேரும் மேல் வகுப்புகளுக்குத் தேர்ச்சி பெற்றுப் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடச் சம்பளம், புதிய புத்தகங்கள் என்று செலவு நிறைய ஆகிக்கொண்டிருந்தது. மங்கையர் கழகத் தில் தந்த மாதச் சம்பளமும், புத்தகங்கள் விற்ற வருமானமுமாக மாதா மாதம் ஒரு கணிசமான தொகை கிடைத்தாலும் அது போதவில்லை. வரவுக்கும், செலவுக்குமாக இழுத்துப் பறித்துக் கொண்டு தான் காலம் ஓடியது. சில நாட்கள் சில்லறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/138&oldid=555862" இலிருந்து மீள்விக்கப்பட்டது