பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 குறிஞ்சிமலர் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாய் பதில் சொன்னாள் பூரணி.

'அம்மா! உங்கள் மங்கையர் கழகத்தில் தூய்மையைப் பற்றி பேச சொல்கிறார்கள், கேட்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்கள், தூய்மையை நம்புவதற்கு மறுக்கின்றன. தங்களைத் தவிர மற்றவர்களிடமும் தூய்மை இருக்க முடியும் என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர். '

'என்னம்மா செய்தி: யார் என்ன கூறினார்கள் உன்னிடம்):

பூரணி நடந்த விவரங்ளைக் கூறி அந்தக் கடிதத்தை எடுத்து மங்களேஸ்வரி அம்மாளிடம் கொடுத்தாள். அந்த அம்மாள் அதைப்படித்து விட்டுப் பெருமூச்சு விட்டாள். முகத்தில் அக்கடிதத்தில் இருந்த செய்திகளை நம்பாதது போல் சினமும் ஏளனமும் இணைந்த சாயை நிலவ, 'இப்படி எல்லாம் கெடுதல் செய்வதற்கு உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருக்கிறார்களா பூரணி?' என்று அனுதாபம் இழையும் மெல்லிய குரலில் கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.

புதுமண்டபத்துப் பதிப்பாளரையும் அவருக்கு வெறுப்பேற் படக் காரணமாக இருந்த நிகழ்சியும் பற்றிச் சொன்னாள் பூரணி.

'உனக்கு அவர் மேல் சந்தேகமா? ' என்று கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.

"வேறு யார் மேலும் சந்தேகப்படக் காரணமில்லையம்மா! இது அவர் செய்த வேலையாகத்தானிருக்க வேண்டும்.'

'உனக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேனே மங்கையர் கழகத்தில் வம்பு அதிகம். ஏற்கனவே நீ இத்தனை சிறுவயதில் இவ்வளவு படிப்பும் புகழும் பெற்றவளாக இருப்பதைக் கண்டு அவர்களுக்குப் பொறாமை. அன்றைக்கு உன்னைச் சிபாரிசு செய்த போதே வயது ஆகவில்லை, மணமாகவில்லை, பட்டம் பெறவில்லை என்று குறைகள் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். எப்படியோ சொல்லிச் சமாளித்து உன்னை உள்ளே நுழைத்து விட்டேன். வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர் களுக்கு அவல் கிடைத்த மாதிரி இப்போது இந்தக் கடிதமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/146&oldid=555870" இலிருந்து மீள்விக்கப்பட்டது