பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 145 வந்து சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா?”

'போதாத காலம் தானாக வருவதில்லை. மனிதர்கள் தாம் இதை உண்டாக்குகிறார்கள். நேருக்கு நேர் நின்று கெடுதல் செய்யத் தெம்பில்லாத துப்புக்கெட்ட மனிதர்கள் இந்தத் தலை முறையில் அதிகமாக இருக்கிறார்கள் அம்மா. பரவலான கோழைத்தனம் என்பது இந்த நூற்றாண்டில் பொதுச் சொத்தாகி விட்டது. பழைய காலத்தில் வீரம் ஓங்கி நின்றதுபோல் இந்தக் காலத்தில் கோழைத்தனம் ஓங்கி நிற்கிறது. துன்பங்களை நேருக்கு நேர் நின்று செய்ய வேண்டும். நேருக்கு நேர் நின்று தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டுமே இன்றைக்குச் சமுகத்தில் இல்லை" என்றாள் பூரணி.

'ஆத்திரப்படாதே பூரணி! நான் அவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். நீ இதை மெல்ல மெல்ல மறந்து விடு. இதை ஒன்றும் பெரிது படுத்த வேண்டாமென்று நான் காரியதரிசி அம்மாளிடம் சொல்கிறேன். நான் காரியதரிசியாக இருந்தால் இந்த மாதிரிக் குப்பைக் கடிதத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து உன்னைக் கூப்பிட்டு விசாரித்து இவ்வளவு சிரமப்படுத்தியிருக்கமாட்டேன். கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்திருப்பேன்." - -

'அக்கா எடுத்துக்குங்க...' என்று தேநீர் கொண்டு வந்து வைத்தாள் செல்லம். அந்தப் பெண் அப்போது தன்னிடம் காட்டிய ஆவலையும் மலர்ச்சியையும் பார்த்த போது பூரணிக்குத் தோன்றியது; "ஐயோ! இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களி லெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப்பற்றித் தவறான கருத்துகள் பரப்பப்படுமானால் என்ன ஆகும்?' என்று நினைக்கிற போதே மனம் கூசியது. அருவருப்பு ஏற்பட்டது. உலகத்திலேயே இழக்க முடியாத பொருள் தன்னைப்பற்றிப் பிறர் மனங்களில் உருவாகி இருக்கும் மதிப்புத்தான். ஒரு முறை இழந்து விட்டால் எளிதில் புதுப்பித்துக்கொள்ள முடியாத பொருள் அது.

கு.ம - 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/147&oldid=555871" இலிருந்து மீள்விக்கப்பட்டது