பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 குறிஞ்சிமலர்

மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். 'இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்து கிறாயே என்று வருத்தமாக இருந்தது எனக்கு செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக் கூடாதா நீ?" -

"யாரிடம் சொல்லி அனுப்புவது அம்மா தம்பிகள் பள்ளிக் கூடம் போய் விடுகிறார்கள். அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வந்து விட்டுத் திரும்பினேனே அதிலிருந்து மனமே சரியில்லை."

'பார்த்தாயா? இன்னும் அந்த நிகழ்ச்சியை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயே? அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக் குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய்? உனக்கு எதற்கு அந்தக் கவலை? நான் காரியதரிசி அம்மாளைப் பார்த்து வேண்டியதெல்லாம் சொல்லிச் சரிசெய்து விட்டேனே? என்றாள் மங்களேஸ்வரி அம்மாள். வேலை போய் விடுமே என்பதற்காகவோ காரியதரிசி அம்மாளின், மிரட்டலுக்காகவோ நான் இப்போது வேதனைப் படவில்லை. சிரித்துக் கொண்டே களங்கமில்லாமல் பேச வந்த அன்பரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடி வந்த அன்புத் துணிவில்லாத கோழைத்தனத்தை எண்ணியல்லவா உருகு கிறேன்' என்று மங்களேஸ்வரி அம்மாளின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள் பூரணி. தன்னைக் கோவிலில் பொற்றாமரைக் குளத்துப் படியில் கண்டது பற்றிக் காரியதரிசியோ, துணைத்தலைவியோ மங்களேஸ்வரி அம்மாளிடம் சொல்லியிருக்க இடமுண்டு என்று பூரணிக்குத் தோன்றியது. அவள் அந்த அம்மாளிடம் கேட்டாள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/154&oldid=555878" இலிருந்து மீள்விக்கப்பட்டது