பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 153

'நீங்கள் காரியதரிசியைச் சந்தித்த போது என்னைப் பற்றி வேறு ஏதாவது உங்களிடம் கூறினார்களா, அம்மா?"

"சொல்ல என்ன இருக்கிறது. நல்ல பெண்ணாக இருந்தாலும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முறை. அதற்காகத்தான் கூப்பிட்டுச் சிறிது கண்டிப்புடனேயே விசாரித்தேன் என்று என்னிடம் கூறினாள் காரியதரிசி, !

காரியதரிசி அம்மாளைப் பற்றிப் பயங்கரமாகக் கற்பனை செய்து வைத்திருந்த பூரணிக்கு இது ஏமாற்றமாக இருந்தது. ஒரு வேளை கோவிலில் அந்த அம்மாள் தன் பக்கம் பார்க்காம லிருக்கும் போதே தானாக அப்படிக் கற்பனைச் செய்து கொண்டுப் பதறி ஓடிவந்திருக்கலாமோ? -என்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று அவளுக்கு.

'அக்கா நீங்க வராம அங்கே ஒண்ணுமே நல்லாயில்லே. எல்லோரும் வந்து பார்த்திட்டு நீங்க வரலேன்னு தெரிஞ்சதும் திரும்பிப் போயிடறாங்க. களையில்லாமல் கெடக்கு என்று செல்லம் கூறிய போது பூரணிக்கு ஆறுதலாக இருந்தது. தனக்காக ஏங்கவும், அனுதாபப்படவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேரும் போது உண்டாகிற ஆறுதல் அது.

'மறுபடியும் நாளைக்கு வருகிறேன். பெண்ணே உடம்பைப் பார்த்துக்கொள். மங்கையர் கழகத்து வேலையைப் பொறுத்த மட்டில் உனக்கு ஒரு கெடுதலும் வராது" என்று கூறிவிட்டு அந்த அம்மாள் சென்றாள். எப்படியோ விவரம் தெரிந்து அன்று மாலையிலும் மறுநாள் காலையிலுமாக அவளிடம் வகுப்புகளில் படிக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். செல்லம் ஒருத்தி போதாதா? அவளுடைய காய்ச்சலைப் பற்றி அவள் மேல் அனுதாபம் உள்ளவர்களிடம் எல்லாம் பறையறைவதற்கு? -

யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? எவனைப் பார்த்துக் கதற வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டிருந் தாளோ, அவன் வரவே இல்லை; கையெழுத்துப் பிரதிகளை வாங்கவும், அச்சுப் படிகளைத் திருத்தவும் என்று தினம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/155&oldid=555879" இலிருந்து மீள்விக்கப்பட்டது