பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 குறிஞ்சிமலர்

தடவையாவது இங்கு வந்து கொண்டிருந்த அரவிந்தன் அவள் காய்ச்சலாகப் படுத்துவிட்ட அந்தச் சில நாட்களில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அரவிந்தன் மானமுள்ளவன்! நீ அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தாயே, அந்த விநாடியிலிருந்தே அவன் உன்னை மறக்கத் தொடங்கியிருப்பான்' என்று அவள் உள்ளமே அவளுக்குப் பதிலளித்தது. வருவான் வருவான் என்று பொறுத்துப் பார்த்தாள். அவன் வருகிற வழியாயில்லை. இனிமேல் ஒரு விநாடிகூட அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது போலிருந்தது. எவ்வளவோ படித்திருந்தாலும் அவள் பெண். அன்புக்காக ஏங்குகிற அந்த உள்ளத்தில் இனி மேலும் அவ்வளவு பெரிய ஆற்றாமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது அவளால். மாலையில் தம்பி திருநாவுக்கரசு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அச்சகத்துக்குத் துரத்தினாள்.

ஆனால் எத்தனை பெரிய ஏமாற்றம்? ஒரு மணி நேரத்துக்குப்பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்; 'அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா? அந்தப் பெரியவர்தான் முன்புறத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்."

'எந்தப் பெரியவர்?" * 'அவர் தான். அன்றைக்கு ஒரு நாள் உன்னைக் காரில் கொண்டுவந்து விட்டாரே. அந்த அச்சகத்தின் சொந்தக்காரர்...' 'அரவிந்தன் எங்கே போயிருப்பதாகச் சொன்னார் அவர்?" 'அதெல்லாம் ஒன்றும் அவர் சொல்லவில்லை. 'என்ன சமாசாரம்?' என்று கேட்டார். உனக்குக் காய்ச்சல் என்று சொன்னேன். 'நான் இன்னும் சிறிது நேரத்தில் அச்சகத்தை மூடிக் கொண்டு உன் அக்காவைப் பார்க்க வருகிறேன். போய்ச் சொல்லு' என்று கூறியனுப்பினார்." --

பூரணிக்கு உள்ளமே வெடித்துவிடும் போலிருந்தது. ஏக்கம் நெஞ்சைத் துளைத்து ஊசிக் கண்களாக ஆக்கியது. பெருமூச்சு விட்டாள். வேறென்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/156&oldid=555880" இலிருந்து மீள்விக்கப்பட்டது