பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 16]

ஆங்கள் மனதுக்கு எதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவே தெரியாதா, அரவிந்தன்? பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போது தான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன்! அன்பு செலுத்துவதில் கூட நீங்கள் குழந்தை தான் போலும் என்று நினைத்த போது அவள் உள்ளத்தில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொண்டு விட்டான். 'காது கேட்காமல் போகவில்லை. வேண்டுமென்றே உங்களை ஏமாற்றி விட்டுதான் போனேன் என்று சொல்லிவிட நாக்கு துடித்தது. உடனிருந்த மனிதருக்காக அதை அடக்கிக் கொண்டாள் அவள். அரவிந்தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைப் பிரித்து அவளுக்கு முன் வைத்தான்.

'இதெல்லாம் எதற்கு? என்று உபசாரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் பூரணி, அன்பு கனிய அவன் கூறலானான்; 'இன்றைக்குக் காலையில் தான் சென்னையிலிருந்து வந்தேன், பூரணி, அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது? உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும் நான் பதறிப் போய்விட்டேன். நேரே இங்கு தான் வருகிறேன்.'

'நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம் என்று வைத்தியர் கூறிவிட்டுப் போயிருக்கிறார். உங்களைப் பார்த்ததும் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று மனத்தில் என்னென்னவோ சேர்த்து வைத்திருந்தேன். இப்போது ஒன்றுமே நினைவு வர மாட்டேனென்கிறது... உடம்புக்கு ஒன்றுமில்லை. மனக்குழப்பங் களால் நானாக இழுத்து விட்டுக் கொண்டதுதான் எல்லாம்..."

இவ்வாறு அவள் கூறிக்கொண்டு வந்த போதே அரவிந்தன் குறுக்கிட்டுப் பேசினான். 'இவன் இருக்கிறானே என்பதற்காக நீ மனம் விட்டுப் பேசத் தயங்குகிறாய். இவன் அன்னியனில்லை. எனக்கு உயிர்த் தோழன். நாங்கள் இருவரும் ஆரம்பப் பள்ளிக் கூடத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள், ஆளைப் பார்த்தால் இப்படிக் காலிப் பயல்போல் முரட்டுத்தனமாக இருக்கிறானே என்று நினைக்காதே. தங்கமான குணம். கொஞ்சம் வாயரட்டை. முருகானந்தம் என்று பெயர். நம்முடைய அச்சகம் இருக்கிறதே,

கும1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/163&oldid=555887" இலிருந்து மீள்விக்கப்பட்டது