பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 குறிஞ்சிமலர் அதே தெருவில் பெரிய தையல் கடை வைத்திருக்கிறான். தையல் தொழிலில் நிபுணன். அதற்காகப் பம்பாயில் போய் பயிற்சி பெற்றுச் சிறப்பான பட்டங்களெல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இந்த ஊரிலுள்ள நவநாகரிக இளைஞர் களுக்கெல்லாம் இவனுடைய தையலில் ஒரே மோகம்..."

அரவிந்தன் பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் முருகானந்தத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிற பாவனையில் பூரணியை நோக்கிக் கைகூப்பினான் முருகானந்தம். அவளும் பதிலுக்குக் கைகூப்பினாள். முருகானந்தம் எப்படிப்பட்ட ஆள் என்பதை உடனே விளங்கிக் கொள்ளப் பூரணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.அக்கா உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டு பழகத் தெரியாது. தோன்றுவதைப் பளிச் சென்று நேரில் கேட்டு விடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்கு குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லா விட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோவிலில் அரவிந்த னைப் பார்க்காதது போல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும் வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத்தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப்பற்றியே சந்தேகம் உண்டாகிவிட்ட தில்லையா உங்களுக்கு நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன், அக்கா. அரவிந்தனுடைய கையைப்பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ, நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனிர்கள். எவனோ ஒரு காவிப் பயலோடு அரவிந்தன் நிற்கிறான் அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/164&oldid=555888" இலிருந்து மீள்விக்கப்பட்டது