பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 குறிஞ்சிமலர்

காலைவரையும் படுக்கையில் நோயுற்றுக் கிடந்தவளுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்ததோ? இருவருக்கும் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் பூரணி.

'நீ ஏன் இந்தக் காய்ச்சல் உடம்போடு சிரமப்படுகிறாய்? தேநீர் வேண்டாம்...” என்று அரவிந்தன் தடுத்தும் அவள் கேட்க வில்லை. அவர்கள் இருவரும் புறப்படும்போது பதினொன்றரை மணிக்குமேல் ஆகிவிட்டது. "வருகிறேன் அக்கா என்று ஆயிரங் காலம் பழகிவிட்டாற் போன்ற உரிமையோடு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் முருகானந்தம்.

அன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஒதுவார்க்கிழவர் வந்து சொல்லிவிட்டுப் போன செய்தி தம்பி திருநாவுக்கரசைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்தது.

"என்னம்மா இந்தப் பயலை இப்படிக் கழிசடையாக விட்டுவிட்டாய்? சரவணப் பொய்கைப் பக்கம்ாகப் போயிருந் தேன். டுரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி வாயில் பீடி வேறு, என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஒடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ? இப்படி தறுதலையாய்த் தலையெடுக் கிறதே இந்த வயசில்; பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக் கிறது. கெட்ட பழக்கம். நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை: என்று கூறி விட்டுப் போனார் ஒதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். 'இறைவா! என் வாழ்வில் மனநிறைவே இல்லையா? சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே! நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன்? எதைச் சமாளிப்பேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தாள்.

ஐந்து மணிக்கு மங்கையர்க்கரசியும் ஐந்தரை மணிக்கு சிறிய தம்பி சம்பந்தனும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். அண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/168&oldid=555892" இலிருந்து மீள்விக்கப்பட்டது