பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 173

'தம்பி இந்தக் கனல் கக்கும் கருத்துக்களை எல்லாம் இங்கேயே சொல்லித் தீர்த்து விடாதே. பொன்னகரத்து மேடை களிலும், பிட்டுத்தோப்புப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதற்கு மீதம் வைத்துக்கொள். இங்கே வேலை நடக்கவேண்டும். நேற்று இரவெல்லாம் இரயிலில் பயணம் செய்துவந்த அலுப்பு என்னால் தாங்கமுடியவில்லை. பன்னிரெண்டு மணிக்காவது நான் படுத்தாக வேண்டும்.' -

முருகானந்தம் அடங்கினான், வேலை தொடர்ந்தது. வாயிற் புரம் யாரோ ஒரு பையன் வந்து தயங்கி நிற்பதை முருகானந்தம் பார்த்துவிட்டான்

'வாசலில் யாரோ பையன் வந்து நிற்கிற மாதிரி இருக்கிறது. இங்கே அச்சகத்தில் வேல்ைப்பார்க்கிற பையன் எவனையாவது வரச் சொல்லியிருந்தாயா நீ?" என்று முருகானந்தம் அரவிந்த னைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, சார் என்று குரல் கொடுத்தான் வெளியில் நின்ற பையன்.

நான் யாரையும் வரச் சொல்லவில்லையே? ஒரு வேளை தந்திப் பியூனோ என்னவோ? போய்ப் பார்' என்று அரவிந்தனிட மிருந்து பதில் வந்தது.

முருகானந்தம் வெளியே எழுந்துபோய் நின்று கொண்டிருந்த பையனை விசாரித்துக் கொண்டு வந்தான். "பையன் உன்னைப் பார்க்க வந்ததாகத்தான் கூறுகிறான். நீ போய் என்னவென்று கேள் அரவிந்தா!'

அரவிந்தன் எழுந்து போய்ப் பார்த்தான். பூரணியின் தம்பி திருநாவுக்கரசு அழுக்குச் சட்டையும் வாரப்படாத தலையுமாக நின்று கொண்டிருந்தான்.

"என்னடா இந்நேரத்தில் வந்தாய்?" - 'ஒன்றுமில்லை, அக்கா உங்களிடமிருந்து ஒரு அஞ்சு ரூபாய் வாங்கிக்கொண்டுவரச் சொன்னாங்க... அவசரம். பையன் வார்த்தைகளைத் தட்டுத்தடுமாறிச் சொன்னான். அவன் விழித்துப் பார்த்த கண்களில் - பார்வையில் ஏதோ பொய்மை மருட்சியைக் கண்டான் அரவிந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/175&oldid=555898" இலிருந்து மீள்விக்கப்பட்டது