பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 177 பக்கத்து ஒட்டல் வேலை நாட்களில் இரவு பன்னிரண்டு மணியானாலும் மாவரைக்கிற “கடமுட' ஒலியும் பாத்திரம் கழுவுகிற ஓசையுமாகக் கொல்லைப்பக்கம் கலகலப்பாயிருக்கும். மறுநாள் ஒட்டலுக்கு வாராந்திர விடுமுறையாதலால் அன்று அந்தக் கலகலப்பு இல்லை. அரவிந்தன் தயங்கிக்கொண்டு நிற்கவில்லை. வாசற்கதவை உள் பக்கமாகத் தாழிட்டு விட்டுக் கொல்லைப் பக்கம் விரைந்தான். நீண்ட வீடு அது. போகும் போதே ஒவ்வொரு பகுதிக்கும் உரிய மின் விளக்கைப் போட்டுக் கொண்டு போனான். அந்த அச்சகத்தில் இரவு நேரத்தில் தனியாக இருக்கிற போது இப்படி ஒர் அனுபவம் இது வரையில் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இன்று ஏற்படுகிறது; முதன் முதலாக ஏற்படுகிறது. -

அவன் கடைசி விளக்கைப் போட்டு விட்டுச் செடிகள் இருந்த பக்கம் நுழைந்த போது மல்லிகைச் செடிகளின் ஓரமாகப் பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்த ஆள் ஒருவன் திடுமென்று விளக்கு ஒளி பாய்வதையும் யாரோ வருவதையும் உணர்ந்து திரும்பி ஓடிச் சுவரில் ஏறிவிட்டான். 'யாரது?" என்று பெருங் குரலில் இரைந்து கொண்டு விரைந்தான் அரவிந்தன். சுவருக்கு மேல் விளிம்பிலிருந்து ஒரு பழைய செங்கல் சரிந்து அரவிந்தனின் கால் கட்டை விரலில் விழுந்தது தான் மீதம். ஆள் அகப்படவில்லை, இன்னாரெனக் கண்டு கொள்ளவும் முடியவில்லை. பின்புறம் குதித்து ஒடும் ஒலி கேட்டது. அவன் சுவர் ஏறின இடத்தில் கீழே மல்லிகைச் செடியின் அருகில் மண்ணெண்ணெயில் முக்கிய ஒரு துணிச்சுருளும் தீப்பெட்டியும் கிடப்பதைக் கண்டான் அரவிந்தன். வந்தவன் என்ன காரியத்துக் காக வந்திருக்கவேண்டுமென்று அதைக் கண்ட போதுதான் அவன் உணர்ந்தான். கொல்லையில் அந்த ஓசை கேட்டதும் வந்து பார்க்காமல் தான் இன்னும் சிறிது நாழிகைப் போது அலட்சியமாக இருந்திருந்தால் தாழ்வாரத்தில் அச்சிட்டு அடுக்கி யிருக்கும் பேராசிரியரது நூற் பகுதிகளின் சாம்பலைத்தான் காண முடியும் என்ற பயங்கர உண்மை அவனுக்குப் புரிந்தது. இந்த விதமான எதிர்ப்புகளும் பகைகளும் மீனாட்சி அச்சகத்துக்கும், அவனுக்கும் இப்போதுதான் முதன்முதலில் ஏற்படத் தொடங்கு கிற புதிய அனுபவங்கள். -

கு.ம - 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/179&oldid=555902" இலிருந்து மீள்விக்கப்பட்டது