பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 குறிஞ்சிமலர்

தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தில் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.

'பூவில் நாற்றம் போன்று உயர்ந்தெங்கும் ஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்தருளி அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்' தம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண் டிருந்தது. 'அப்பா! உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப் படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வரட்டுமா?" என்று கவலையோடு கேட்டேன். -

அப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். 'நான் போய்க் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா!' என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.

நான் டாக்டரோடு திரும்பியபோது தம்பி ஒ வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகை தான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த் தோற்றம்.

அப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன் பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும் , பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர் வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லாக் கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறை விட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக் கின்றன.

அப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அநுதாபத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/18&oldid=555742" இலிருந்து மீள்விக்கப்பட்டது