பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 181

சொற்பேதையருக்(கு) அறிவு இங் கினிதாக

வருமெனவே சொல்லினாலும் நற்போத்ம் வாராது ஆங்கவர்

குணமே மேலாக நடக்குந்தானே"

மதுரை நகரத்து வீதிகளில் ஒலிகள் தேய்ந்து நள்ளிரவு கொலுவிருக்கும் அந்த நேரத்தில் ஒலிகள் தேயாத ஒரு வீதியில் ஒளி குன்றா ஒர் அச்சகத்து முன் அறையில் அவர்கள் உட்கார்ந் திருந்தார்கள். திருத்தப்பெற்றவையும், திருத்தப் பெறாதவையு மாக அச்சுப் பிரதிகள் மேசை மேல் தாறுமாறாகக் கிடந்தன. அவை சிதறிக் கிடந்த விதம் அங்கிருந்தவர்களின் அப்போதைய மனநிலையையே காட்டுவது போல் இருந்தது.

அரவிந்தன் கூறிய விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டு முருகானந்தம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் முகக் குறிப்புத் தீவிரமான சிந்தனையைக் காட்டிற்று. எல்லாவற்றையும் இழந்து பறிகொடுத்துவிட்டாற் போல் சோர்ந்து உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்தாள். பூரணி அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் முருகானந்தத்தைப் பார்த்தான்.

'முருகானந்தம் சும்மா உட்கார்ந்துகொண்டிருந்தால் என்ன வழி? பூரணியும் இந்த அம்மாளும் நம்மை நம்பிக் கொண்டு தானே வந்திருக்கிறார்கள் ஏதாவது செய்ய வேண்டாமா? உனக்கு இந்த அம்மாளின் மனநிலையைப் புரிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டும் இப்படி ஒரு வழியும் சொல்லாமல் இருக்கிறாயே? சிறு பையன் காசு திருடியதையும், சீட்டு விளையாடியதையும், காலி கும்பலோடு சேர்ந்து கொண்டு திரிவதையும் இன்று கண்டிக்காமல் இன்னும் ஒரு மாதம் கழித்துக் கண்டித்து வழிக்குக் கொண்டு வந்தாலும், கெட்டுப்போவது ஒன்றுமில்லை; ஆனால் வயது வந்த ஒரு பெண், திருமணமாகாதவள் தனியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பிப்போவதென்பது எத்தனை பெரிய கொடுமை பெற்ற மனம் என்ன பாடுபடும் முருகானந்தம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/183&oldid=555906" இலிருந்து மீள்விக்கப்பட்டது