பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - - குறிஞ்சிமலர்

மட்டும் தனியாக வீட்டில் போய்ப் படுத்துக் கொள்வதும் இயலாது. அந்த அம்மாளைத் திருப்பரங்குன்றத்துக்கு அழைப்பு தற்குப் பதிலாகத் தானே அந்த அம்மாளோடு மதுரையில் தங்கி விட்டால் என்ன என்று நினைத்துத் தயங்கியது பூரணியின் உள்ளம்.

"என்னைக் கொண்டு போய்விடுகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மா இவ்வளவு நாழிகைக்கு மேல் நான் அங்கே போய் என்ன செய்யப் போகிறேன்? உங்களோடு உங்கள் வீட்டி லேயே இருந்து விடுகிறேன்" என்று பூரணி தன் விருப்பத்தை வெளியிட்டபோது மங்களேஸ்வரி அம்மாள் இரட்டை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள். அவர்கள் காரில் ஏறிக் கொண்டனர். வழியனுப்புவதற்காக நிற்பதுபோல் அரவிந்தனும் முருகானந்தமும் அச்சகத்து வாயிற்படிக்குக் கீழே நடை பாதை மேடையில் கார் அருகே நின்றனர். கார் புறப்பட இருந்த போது முருகானந்தம் மிக அருகில் நெருங்கி "பூரணியக்கா நாளைக்குக் காலையில் நானும் அரவிந்தனும் இந்த அம்மா வீட்டுக்கு வருகிறோம். மேலும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பதற்றமடையாமல் இருக்கச் சொல்லுங்கள்; எங்களால் ஆனதைச் செய்கிறோம். அநேகமாக நாளைக் காலையில் நாங்கள் வரும்போதே உங்கள் தம்பியையும் தேடிப் பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்து விடுவோமென்று நினைக் கிறேன். வருத்தப்பட்ாதீர்கள். தைரியமாக இருங்கள்' என்றான். அவன் கூறியதைக் கேட்ட மங்கள்ேஸ்வரி அம்மாள், 'இதென்ன பூரணி? உன் தம்பியைப்பற்றி இவர் என்னவோ சொல்லுகிறாரே, அவன் எங்கே போய் விட்டான்?' என்று திகைப்போடு வியந்து வினவினாள். அந்த அம்மாள் அகாலத்தில் தன்னைத் தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் வந்து வசந்தா காணாமற் போய் விட்ட செய்தியைத் தெரிவித்த போது தன் தம்பி திருநாவுக்கரசு பற்றிச் சொல்வதற்குத் தோன்றவேயில்லை பூரணிக்கு. பெரிய துன்பத்தோடு பரபரப்படைந்து ஓடி வந்திருக்கிறவர்களிடம் சிறிய துன்பத்தைச் சொல்லி தன் வருத்தத்தில் அவர்களும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டாமே என்று தான் அவள் சொல்லாமல் இருந்து விட்டாள். தனக்குச் சமய்ம் நேர்ந்தபோதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/186&oldid=555909" இலிருந்து மீள்விக்கப்பட்டது