பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 குறிஞ்சிமலர்

'நீ சொல்வது உண்மைதான் அரவிந்தன், ஒழுக்கத்தைப் பற்றிய ஆர்வம் இளைஞர்களிடையே குன்றிவிட்டது. ஆனால் அதற்கு இளைஞர்கள் மட்டும்தான் காரணமென்று நினைக் கிறாயா?"

இதற்கு அரவிந்தன் பொருத்தமாகவும், நன்றாகவும் பதில் சொன்னான். இப்படிக் கேள்வியும் பதிலுமாகச் சிறிது நேரம் விவாதம் செய்துவிட்டு அவர்கள் உறங்கிப் போனார்கள்.

காலையில் அரவிந்தன் விழிக்கும்போது கொல்லையில் முருகானந்தம் யாருடனோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். போய்ப் பார்த்தபோது பின்புறம் குப்பையள்ள வருகிற தோட்டியை அவன் விரட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. தோட்டி தனக்கு ஒரு பாவமும் தெரியாதென்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தான். முருகானந்தம் தனக்கு இருந்த கோபத்தில் தோட்டியைக் கீழே தள்ளி மிதித்து விடுவான் போலிருந்தது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் அரவிந்தன் எழுந்து போய்த் தோட்டிக்கு அடியும் உதையும் விழாமல் காப்பாற்றினான்.

அவன் என்னப்பா செய்வான், செய்திருந்தாலும் உன்னிடம் நான் செய்தேன் - என்று சொல்லிக் கொண்டிருப்பானா? நாம் ஒழுங்காகச்சுவரைப் பெரிதாக்கிச் சந்து வழிக்குக் கதவும் போட்டு விட்டால் யாரும் துழைய முடியாது அப்புறம்' - என்று முருகானந்தத்தைச் சமாதானப் படுத்திக் கூட்டிக் கொண்டு வந்தான் அரவிந்தன்.

'மயிலே மயிலே இறகு போடு- என்றால் போடாது அரவிந்தன். கன்னத்தில் கொடுத்தால் உண்மையைக் கக்கியிருப் பான். நீ எழுந்திருந்து வந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய். போய்த் தொலையட்டும். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கிற காரியத்தையாவது இன்று காலையிலிருந்து தொடங்கலாம்" என்று அன்று செய்யவேண்டிய வேலையை நினைவுபடுத்தினான் முருகானந்தம். . . .

அரவிந்தன் மேசை இழுப்பறையைத் திறந்து வசந்தாவின் படத்தை எடுத்து முருகானந்தத்திடம் தந்தான். அந்தப் படத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/192&oldid=555915" இலிருந்து மீள்விக்கப்பட்டது