பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 193 தந்தியை எடுத்து அவள் அரவிந்தனிடம் தந்தாள். தந்தி விடியற் காலம் நான்கு மணிக்குத் திருச்சியிலிருந்து கொடுக்கப் பட்டிருந்தது. - r . . "

திரும்பி வர வழிச் செலவுக்குப் பணமில்லை, திருச்சி இரயில் நிலையத்தில் இருக்கிறேன். வந்து அழைத்துப் போகவும்! விவரம் நேரில் - வசந்தா. - - --

தந்தி மங்களேஸ்வரி அம்மாள் பேருக்கு வந்திருந்தது. அரவிந்தன் படித்து விட்டு முருகானந்தத்திடம் கொடுத்தான்.

15 "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும், அம்மா பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப் பாரில் அறங்கள் வளரும், அம்மா!'

-്ഷഥങ്ങി

பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப் படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான்.

"சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை: இங்கே மதுரையில் என்னிடம் உடைகள் தைத்து வாங்கிக் கொண்டு இந்த மணிபர்ஸையும் மறந்து வைத்து விட்டுப் போய் விட்டான். இந்தத் தடவை நிச்சயமாக அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணப் போகிறான் பாருங்கள். அக்கா நான் இவனைச் சும்மா விடப் போவதில்லை. எப்படியாவது கண்டுபிடித்து உள்ளே தள்ளப் போகிறேன்' என்று மணிபர்ஸின் மைக்கா உறைக்குள் இருந்த ஆணின் படத்தை பூரணிக்குக் காட்டிச் சினமாகப் பேசினான் முருகானந்தம். அப்போது அருகிலிருந்த "அரவிந்தன் பூரணியின் முகத்தை நோக்கி முறுவல் செய்தவாறு

கேட்கத் தொடங்கினான்: - * * ,

கு.ம - 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/195&oldid=555918" இலிருந்து மீள்விக்கப்பட்டது