பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 குறிஞ்சிமலர்

தலை சீவிக் கொள்ளச் செய்தான். காலிப் பையனுக்குரிய தோற்றத்தை மாற்றிப் பள்ளிக் கூடம் போகிற பையன்மாதிரி ஆக்கின. பின்பே அரவிந்தனுக்கு நிம்மதி வநதது. சிற்றுண்டி வர வழைத்து இருவரும் சாப்பிட்டனர். 'தம்பி! இந்த விநாடியோடு உன் கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விடு. பழையபடி உன்னைப் படிக்கும் மாணவனாக்கிக்கொள். மார்ச் மாதத் துக்கு இன்னும் அதிக நாளில்லை. இந்தப் பரிட்சை தவறினால் இன்னும் ஒராண்டு iணாகி விடும். இரவு பகல் பாராமல் உழைத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றுவிட்டாயானால் புதிய ஆண்டில் கல்லூரிப் படிப்புக்கு நுழையலாம். உன் குடும்பத்து நிலையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்ப தில்லை. உன் அக்கா எவ்வளவு காலம் இப்படித் தானே உழைத்து உங்களைக் காப்பாற்ற முடியும்? நீ படித்த பின் உன் தம்பி படிக்க வேண்டும். தங்கை படிக்க வேண்டும். எல்லாவற்றையும் உன் அக்கா ஒருத்தியே தாங்கிச் சமாளிக்க முடியுமா? வீட்டுக் கஷ்டம் தெரிந்து அதற்கேற்ப உன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் அப்பா!' என்றெல்லாம் மனத்தில் உறைக்கும்படி சொல்லித் திருநாவுக்கரசைப் பசுமலையிலுள்ள அவன் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். பையனைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லித் தனியாக அனுப்பினால் மறுபடியும் "கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்கிற மாதிரி எங்கேயாவது ஊர் சுற்றக் கிளம்பிவிடு வானோ என்று அரவிந்தன் சந்தேகப்பட்டான். அதனால் தான் அச்சகத்தில் மேசை நிறையக் குவிந்து கிடந்த வேலைகளை யெல்லாம் திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாமென்று போட்டு விட்டுத் தானும் பையனோடு பசுமலைக்குச் சென்றான்.

மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசு மலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ் போர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறிஸ்துவர் களுடைய கண் காணிப்பில் உள்ள பள்ளிக் கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/204&oldid=555927" இலிருந்து மீள்விக்கப்பட்டது