பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 குறிஞ்சிமலர் 'மன்னிக்க வேண்டும். உங்களைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது. ஆனால் இது கல்வித் துறையின் சட்டம். இந்தப் பையனுக்காகவோ, உங்களுக்காகவோ நான் இதை மாற்று வதற்கில்லை" என்று சிரித்தவாறே கூறிவிட்டு மேசைமேலிருந்த காகிதக்கட்டு ஒன்றைப் பிரித்துக் கவனிக்க ஆரம்பித்து விட்டார் தலைமையாசிரியர். அரவிந்தன் மேலே நிமிர்ந்து பார்த்தான். ஏசுநாதருடைய படத்தில் நிமிடத்துக்கு நிமிடம் கண்களின் கருணையும் மார்பின் குருதியும் அதிகமாகி வளர்ந்து கொண்டு வருவது போல் தோன்றியதோ என்னவோ!

'வருகிறோம்" என்றான் அரவிந்தன், . 'செய்யுங்கள் என்று குனிந்த தலை நிமிராமல் மறுமொழி கூறினார் அவர் திருநாவுக்கரசுடன் வெளியேறினான் அரவிந்தன். 'தம்பி பார்த்தாயர்? முட்டாள் தனமாகப் பள்ளிக்கூடத்துப் படிப்பை அது முடிகிற தருவாயில் பாழாக்கிக் கொண்டு விட்டாயே? இன்னும் ஒராண்டுகாலம் காத்திருந்து உன்னை மறுபடியும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க உன் அக்காவால் முடியுமா?" என்று பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து கீழிறங்கிய போது அரவிந்தன் ஏக்கத்தோடு கூறிய சொற்கள் பையனின் செவிகளில் விழுந்தும் அவன் ஒன்றும் சொல்லாமல் கல்லடி மங்கன் போல்தலை குனிந்து நடந்து கொண்டிருந்தான்.

எப்படியும் இந்தப் பையனைத் திருத்தி நல்ல வழியில் கொண்டு வந்து விடவேண்டும். சிறிது காலத்துக்கு அச்சகத்திலேயே நம்மோடு பக்கத்தில் வைத்துக் கொண்டு நம் கவனத்திலேயே ஆளை உருவாக்கி விடலாம்' என்று அரவிந்தன் மனத்தில் அப்போது ஒரு தீர்மானம் உண்டாகியிருந்தது.

திரும்பியதும் முதல் வேலையாகத் திருநாவுக்கரசை உள்ளே அழைத்துப் போய் “பைண்டிங்' பகுதியில் உட்கார்த்தி அச்சடித்த பாரங்களை மடித்து அடுக்கச் சொன்னான். பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள் என்று அச்சகத்து போர்மேன் இடத்திலும் கூறிவிட்டு வந்தான். - .

'தம்பி எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கும் வெளியேறிச் செல்லக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/206&oldid=555929" இலிருந்து மீள்விக்கப்பட்டது