பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 207 பெரிய சினிமா டைரக்டர் என்பது அப்புறம் தான் எனக்குத் தெரிந்தது... அடேய் பையா? அப்புறம், பித்தானுக்கு ஒட்டைப் போடலாம். ஒடிப் போய் சாருக்கு காப்பி வாங்கிவா. பெரிய சினிமா டைரக்டர் இவர்' என்று வந்தவரை அட்டகாசமாக வரவேற்று உள்ளே உட்கார வைத்தான் முருகானந்தம். வந்த வருக்கோ பயமாயிருந்தது அந்த அபூர்வ மரியாதை,

'மணிபர்ஸை எடு எனக்கு நேரமில்லை. அவசரமாகப் போகணும்... வந்தவர் அவசரப்படுத்தினார்.

'எப்போதும் அவசரந்தானா சார் உங்களுக்கு? கொஞ்சம் பொறுத்துப் போகலாம்! இவ்வளவு நாள் வைத்துக் கொண் டிருந்துவிட்டு வெறும் பணம் மட்டுமா தருவது? வட்டியும் சேர்த்துத் தருகிறேன் சார்' என்று கூறிக்கொண்டே வந்த முருகானந்தம் குபிரென்று முகத்தில் கடுமை குடிபுக "அயோக்கிய நாயே?’ என்று சீறிக்கொண்டு அந்த ஆளுடைய மார்புச் சட்டையைப் பனியனோடு பிடித்து உலுக்கித் தூக்கி நிறுத்தினான்.

16

அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. -

- - திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த தோல் பெல்டைக் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடி விட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்கா விட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று சொல்ல முடியாது.

'போலீஸ் இருக்கிறது, சட்டம் இருக்கிறது, கை வலிக்க நீ ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள், விடு..." என்று தன்னைக் கைப்பற்றி விலக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/209&oldid=555932" இலிருந்து மீள்விக்கப்பட்டது