பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 குறிஞ்சிமலர்

அவள் சம்மதித்தாள். சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தனக்காக அத்தனை கூட்டம் கூடி அவ்வளவு வசூல் ஆகுமா என்பது மட்டும் அவளுக்குச் சந்தேகமாகவே இருந்தது.

அரவிந்தன், முருகானந்தம் ஆகியோரும் நண்பர்களும் டிக்கட் விற்பனையில் முனைந்து ஈடுபட்டனர். வீடிழந்த ஏழை மக்களின் குடியிருப்பு நிதிக்காகப் பூரணியின் சொற்பொழிவு என்று பெரிய பெரிய சுவரொட்டி விளம்பரங்கள் அச்சிடப் பெற்று விதிக்கு விதி, சுவருக்குச் சுவர் ஒட்டியிருந்தார்கள். 'தனக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? தான் அவ்வளவு விளம்பரப் பெருமைகளுக்கு உரியவளா? என்று நினைக்கும் போது அவளுக்கே வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

வியாழக்கிழமை மாலைக்குள்ளேயே பெரும்பகுதி டிக்கட்டு கள் விற்றுவிட்டதாக முருகானந்தம் வந்து மகிழ்ச்சியோடு தெரிவித்தான். மதுரை நகரத்தில் பெரிய பஞ்சாலைகளில் கூலி வேலை செய்யும் பெண்களிலிருந்து மங்கையர் கழகத்துக்குக் காரில் வந்து அழுக்குப்படாமல் இறங்கித் தமிழ் படிக்கும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் வரை அத்தனை பேரும் வற்புறுத்தல் இல்லாமல் தாங்களே விரும்பிப் பணம்கொடுத்து டிக்கட் வாங்கியிருப்பதாகவும் அவனே தெரிவித்தான்.

"இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடந்தது அக்கா. உங்கள் மங்களேஸ்வரி அம்மாளிடம் மூன்று பத்து ரூபாய் டிக்கட்டுகள் கிழித்துக் கொடுத்தேன். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு பேசாமல் உள்ளே போனார்க்ள் சிறிது நேரத்துக்குள் ஏதோ ஒரு "செக்' எழுதிக் கொண்டு வந்தார்கள். அந்த 'செக்கை வாங்கிப் பார்த்தவுடன் நான் மலைத்துப் போனேன். "முப்பது ரூபாய்க்குத்தான் டிக்கட் தந்திருக்கிறேன்' என்று சொல்லி நான் தயங்கினேன். 'பரவாயில்லை! நான் என் நிலைக்கு இவ்வள வாவது உதவிசெய்ய வேண்டும், வாங்கிகொள்ளுங்கள். இதை யாரிடமும் சொல்லிப் பெருமைப்பட வேண்டாம். உங்கள் பெயர்ப் பட்டியலில் ஒர் அன்பர் ஆயிரம் ரூபாய் என்று மட்டும் எழுதிக்கொள்ளுங்கள் போதும்; பெயர் போடவேண்டாம்" என்று பெருந்தன்மையாகச் சொல்லி விட்டார்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/216&oldid=555939" இலிருந்து மீள்விக்கப்பட்டது