பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 குறிஞ்சிமலர் உயிர் ஒன்றைக் கொண்டுவரத் தவமிருக்கும் தாய்மையின் ஒளி காமுவின் தோற்றத்தில் இருந்தது. கூடை நிறைய வைத்திருந்த பூவில் இரண்டு முழம் தன் கையாலேயே கிள்ளிப் பூரணியின் கூந்தலில் வைத்துவிட்டாள் ஒதுவார்ப்பாட்டி. அந்த வயது முதிர்ந்த சுமங்கலி தன் கூந்தலைத் தீண்டிப் பூவைத்த போது பூரணிக்கு உடல் சிலிர்த்தது. அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படித் தினம் என் தலையைத் தொட்டுப் பின்னிப் பூ வைப்பாளே என்று உள்ளத்தில் அம்மாவும், அம்மாவைப்பற்றிய நினைவும் பரவிட மெல்லக் கண் கலங்கி நின்றாள் அவள்.

'பாட்டி என்னை மறந்திட்டீங்களே? உங்களுக்கு எத்தினி ஒர வஞ்சனை. அக்கா தலைக்கு மட்டும் உங்க கையாலே பூ வைச்சீங்க, என்னைக் கவனிக்காமப் போறிங்களே' என்று மங்கையர்க்கரசி விளையாட்டாகச் சொல்லிச் சிரிக்கவே, கூடம் முழுவதும் பெண்களின் நளின நகையொலி அலை அலையாக எழுந்து 'கிண்கிணி நாதம் பரப்பியது.

'நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி.

அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றாற்போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கும் நடுவில் நீட்டி முழக்கி இழுபட்ட குரலில் பூரணியை நோக்கி, 'ஏண்டியம்மா, இது உன் பெண்ணா? என்ன வாய்? இந்த வயதிலேயே இப்படி வெடுக்கு வெடுக்கென்று பேசுகிறதே! என்று அசட்டுப் பிசட்டென்று மங்கையர்க் கரசியைச் சுட்டிக் காட்டிக் கேட்டு வைத்தாள்.

"பெண் இல்லை. அவளுடைய தங்கை' என்று யாரோ சொன்னார்கள். கூட்டத்தில் பெண்களின் ஏளன நகை ஒலி மறுபடியும் எழுந்து ஒய்ந்தது. தன்னுடைய புகழ், தன்னுடைய உலகத்தை விலை கொள்ளும் அபார ஞானம், நெருப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/218&oldid=555941" இலிருந்து மீள்விக்கப்பட்டது