பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 219 பதிந்திருக்கிறான். ஆனால் அவள் இப்போது தாகம் கொண்டு துடிக்கவில்லை, அந்த வாழ்வுக்கு அரவிந்தனும் அப்படித் தாகம் முற்றித் துடித்ததாகத் தெரியவில்லை. இருவரும் அன்பால் ஒன்று சேர்ந்தார்கள். இப்போதே அகல்விளக்கின் சின்னஞ்சிறு சுடரிலிருந்து குத்துவிளக்கின் பெரிய சுடர்களை ஏற்றி ஒளிர விடுவதுபோல் சிறிய அன்பிலிருந்து பெரிய பொதுக் காரியங் களைச் செய்து சமூகத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கொளுத்தப் பெறாத ஊதுவர்த்தி போல் உள்ளங்களில் மட்டும் மணந்து வெளியே மணக்காமல் இருந்தது, அந்த அன்பு. மங்கையர் கழகத்து மொட்டைக் கடித நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் விழிப்பாக இருந்தார்கள். ஆனால் உலகம் அதைவிட விழிப்பாக இருந்து தொலைக்கிறதே. .

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. தியேட்டர் நிறையப்

பெண்கள் கூடியிருந்தார்கள். பூரணி பேசுவதற்காக எழுந்து நின்றாள். அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லத்திடம் ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையைக் கொடுத்துப் பூரணிக்குப் போடச்சொன்னாள். வளையலணிந்த கரங்கள் தட்டப்படும் ஒலி தியேட்டரை அதிரச் செய்தது. பூரணி பேசத் தொடங்கினாள். கூட்டத்தில் அமைதி நிலவியது. 'இது ஏழைகளின் உதவி நிதிக்கான கூட்டம். துன்பப்படுகின்றவர் களுக்கு உதவ நாம் கடமைப்பட்டவர்கள். துன்பப்பட்டு அழு கின்றவர்களின் கண்ணிர் உலகத்தை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த படை என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அழச்செய்து பிறரை வருத்துகிறவர்கள் பதிலுக்குத் தாங்களே அழவேண்டிய சமயம் வரும். நீங்களெல்லோரும் இந்த நிதிக்கு உதவி செய்திருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது!’ என்று முன்னுரை கூறி விட்டுத் தான் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிப் பேச முற்பட்டாள் அவள். இனிமையும், எடுப்பும் மிக்க அவள் குரல் தேன் வெள்ளமாய்ப் பொங்கியது. பேச்சினிடையே அவள் உணர்ச்சி வசப்பட்டாள், ஒரே ராகத்தை வளர்த்து விரிவாக்கிப்பாடும் நல்ல இசைக் கலைஞனைப் போல் அவள் சொற்பொழிவு வளர்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஊசி விழுந்தால் ஒசை கேட்கிற். அளவு அமைதி. உலகத்துக் கவிகளெல்லாம் தத்தம் காவியங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/221&oldid=555944" இலிருந்து மீள்விக்கப்பட்டது