பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 குறிஞ்சிமலர்

களுக்கு நாயகியாக எத்தனையோ பெண்களைப் படைத்தார்கள். ஆனால் காவியப் பெண்கள் சித்திரத்துத் தாமரை போல் வாடாமலும் கூம்பாலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மை வாழ்வில் பெண் படுகிற வேதனைகள் அதிகம். பெண் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளும் அதிகம். கண்ணகிக்கும், சாகுந் தலைக்கும், சீதைக்கும் காவியங்களில் ஏற்பட்ட துன்பங்களை ஊழ்வினையின் பெயர் சொல்லி மறைத்தார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய வாழ்வின் நிகழ்கால வீதிகளில் தான் பெற்ற குழந்தையைத் தானே விற்க வரும் பெண்ணை அல்லவா பார்க்கிறோம்? பெண்களின் வாழ்வு உண்மைத் தாமரை போல வாடுவதாயிருக்கிறது. கவிகள் அதை சித்திரத்தில் எழுதி ஏமாற்றியிருக்கிறார்கள். துன்பங்களிடையே நாம் இருக்கிறோம். அவற்றைத் தகர்க்க வேண்டும்....' பேச்சுத் தடைப்பட்டது. கண் விழிகள் வெளிறின. அடித்தொண்டையிலிருந்து இதயத்தை வெளியே இழுத்தெறிந்து விடுவது போல் ஒர் இருமல் இருமினாள் பூரணி. கமலப் பூப்போன்ற அவள் வலக்கை இருமிய வாயைப் பொத்திக் கொண்டது. இருமி முடித்தவள் தனது உள்ளங்கையைப் பார்த்தாள். அதில் இரண்டு துளி ரத்தம் மின்னி Աl351, முருகானந்தம் சோடாவை உடைத்து எடுத்து வந்தான்.

17

"எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,

எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன். எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!

எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!” - பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றிலிருந்து மேலே நெஞ்சுக் குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலை துழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. 'அம்மா என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ் வொன்றாகக் காற்றில் அடித்துக் கொண்டு போகப்படும் தளர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/222&oldid=555945" இலிருந்து மீள்விக்கப்பட்டது