பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 223

'அம்மா! நீ எங்கிருந்து என்னைக் கைநீட்டி அழைக்கிறாய்? நான் எங்கிருந்து அதனை உணர்கிறேன்? நீ எங்கிருந்து என்னை எண்ணுகிறாய்? நான் எங்கிருந்து உன்னை எண்ணுகிறேன்? எனக்கு எதுவுமே விளங்கவில்லையே? என் உடம்பின் கனம் ஏன் இப்படிக் குறைந்து கொண்டே வருகிறது? எலும்பும், தோலும், சதையுமாக வாழும் புண்ணாகி, வளரும் புண்ணாயிருந்த இந்த உடம்பு மணமும் மென்மையுமாய் ஒரு சிறு பூவாக மாறிப் பூத்துவிட்டதா? என்னுடைய பூவுடம்பு காற்றில் மேலே மேலே பறந்து வானத்தை நிறைத்துக் கொண்டு தெரியும் அம்மாவின் கைகளையும் முகத்தையும் நோக்கிப் பறந்து போகிறதா? ஏன் இப்படி நான் பூவாகிறேன். ஐயோ! முகத்தில் யாரோ ஒரு கந்தவர்ப் பெண் அமுதத்தை அள்ளித் தெளிக் கிறாளே!

சோடாவை உடைத்துக் கொண்டு வந்த முருகானந்தம் பூரணி நாற்காலியிலேயே மூர்ச்சையாகியிருப்பதைக் கண்டு சோடா நீரைக் கையில் கொட்டி முகத்தில் மெல்லத் தெளித்தான். மேடை யைச் சுற்றிப் பெண்கள் கூட்டம். பல நிறத்துப் பூக்களைச் சிந்தின மாதிரிக் கூடிக் குவிந்து விட்டது. பூரணி கண் மலர்ந்து பார்த்தாள். மூச்சு இழைத்தது. நெஞ்சில் வலியின் வேதனை. விழிகள் திறந்து திறந்து சொருகின. 'என்ன ஆயிற்று? தங்கக் குத்து விளக்கு மாதிரி நின்று பேசிக் கொண்டிருந்தாளே எந்தப் பாவியின் கண் பட்டதோ' என்று மேடையருகில் ஒரு வயதான அம்மாள் அனுதாபத்தோடு யாரிடத்திலோ சொல்லிக் கொண்டி ருந்தாள். கூட்டம் அலை மோதிற்று. அத்தனை கண்களும் மேடையில் நாற்காலி மேல் சாய்ந்து கிடந்த அவளையே பார்த்து இரங்கி நின்றன. நினைப்பும் நினைப்பற்ற நிலையுமாக இருந்த அவள் செவியில் சுற்றிலும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் விழுந்தன. - . .

'பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாகியிருக்கிறதாம், ஏழை களின் குடிசை உதவி நிதி என்று இந்தப் பெண் தன்னுடைய சொற்பொழிவினாலேயே இவ்வளவு சேர்த்துக் கொடுத்து விட்டாளே! என்ன வாக்கு என்ன சொற்சாதுரியம்! எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/225&oldid=555948" இலிருந்து மீள்விக்கப்பட்டது