பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 225 களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்தி லிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான்.

அந்தச் சில மணி நேரத்தில் தன்மேல் அன்பு கொண்டிருந்த எல்லோரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. டாக்டர் அரவிந்தனிடம் வந்து கூறினார்,

"பயப்படுகிறார் போல் இப்போது ஒன்றுமில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து நாள் தவறாமல் இரண்டு மூன்று பிரசங் கங்கள் வீதம் தொண்டையைக் கெடுத்துக் கொண்டால் பயப்பட வேண்டிய நோயாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'வருமுன் காக்க வேண்டும். நான் சொல்கிற யோசனைப்படி செய்யுங்கள். குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது இந்தப் பெண்ணுக்கு முழு அளவில் ஒய்வு தேவை. எங்காவது நல்ல இடத்துக்கு அழைத்துச் சென்று ஓய்வுபெறச் செய்யுங்கள். ஊட்டமான உணவும், உற்சாகம் நிறைந்த சூழ்நிலையும் கிடைக்க வேண்டும். தாமதமின்றி இதைச் செய்துவிடுவது நல்லது."

டாக்டர் கூறியதன் அவசியத்தை அரவிந்தனும் உணர்ந்தான். அந்த ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் மதுரையிலும் பக்கத்துச் சிற்றுார்களிலும் அலைந்து பல சொற்பொழிவு செய்திருக்கிறாள் அவள். வேளைக்கு உணவில்லை. தூக்கமில்லை. சொற்பொழி வைத் தவிர சமூகப் பொதுப்பணிகளுக்காக வேறு அலைந்திருக் கிறாள். கார் வசதி, இரயில் வசதி இல்லாத கிராமம் ஒன்றில் மலேரியா பரவி தினம் நான்கு பேர்கள் வீதம் இறந்து கொண்டிருந்தார்கள். மதுரை மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பிரதேசத்தில் இருந்தது அந்தக் கிராமம். பத்திரிகையில் செய்தி பார்த்தவுடன் அரவிந்தன் அந்தக் கிராமத்துக்குப் புறப்பட இருந்தான். பூரணி அவனை முந்திக் கொண்டுவிட்டாள். -

'எல்லாப் பொதுக் காரியங்களையும் நீங்களே எடுத்து கொண்டால் அப்பாவின் புத்தக வேலைகள் என்ன ஆவது? இந்தக் கிராமத்துக்கு நான் போய் வருகிறேன்” என்று மலேரியா ஒழிப்பு மருந்தோடு அவளே புறப்பட்டுப் போய் அந்தக் கிராமத்தில் இருந்து பணி புரிந்துவிட்டு வந்தது, இப்போது அரவிந்தன் நினைவில் படர்ந்தது. அவளுக்கு ஓய்வு அவசியம் தான் இல்லா

15 - تما. تقييم)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/227&oldid=555950" இலிருந்து மீள்விக்கப்பட்டது