பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 குறிஞ்சிமலர்

விட்டால் அவள் நிரந்தரமான நோயாளியாகி விடுவாள் என்று நினைத்து அஞ்சினான் அரவிந்தன். காற்று மாறுவதற்காக அவளை எந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று அரவிந்த னும் மங்களேஸ்வரி அம்மாளும் கலந்து ஆலோசனை செய்தனர். 'வசந்தாவும் செல்லமும் என் வயிற்றில் பிறந்த பெண்கள். பூரணி எனக்கு வயிற்றில் பிறவாத பெண். அவள் எனக்கு அறி முகமான நாளிலிருந்து நான் அப்படித் தான் நினைத்துக்கொண் டிருந்தேன். அவளுக்கு இல்லாத உபகாரமா கோடைக்கானல் மலையில் எனக்கு ஒரு பங்களா இருக்கிறது. என் கணவர் இருக்கிறபோது வாங்கினார். அப்புறம் எப்போதாவது கோடை யில் நானும் குழந்தைகளும் போனால் தங்குவது உண்டு. இப்போது அது காலியாகத்தான் இருக்கிறது. பூரணிக்கு அங்கே வசதி செய்து கொடுத்துவிட்டால் ஆறுமாதமோ ஒரு வருடமோ விருப்பம் போல் இருக்கலாம், இடமும் ஆரோக்கிய மான இடம்; அவளுக்கும் உற்சாகமாக இருக்கும்' என்றாள் அந்த அம்மாள். - - r

பூரணியை உயர்ந்த இடத்தில் போய் இருக்கச் செய்ய வேண்டுமென்கிறீர்கள். அப்படித்தானே?' என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அரவிந்தன்.

"அவள் என்றும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டியவள் தானே?" என்று இரட்டைப் பொருள்படவே அந்த அம்மாளிட மிருந்து பதில் வந்தது அவனுக்கு. பூரணியின் தம்பி, தங்கை இருவரையும் யார் பார்த்துக் கொள்வதென்று பிரச்சன்ை எழுந்தது. அந்தப் பொறுப்பையும் மங்களேஸ்வரி அம்மாளே எடுத்துக் கொண்டபோது எப்படி நன்றி கூறுவதென்று தெரியாமல் திணறினான் அரவிந்தன். இந்த ஏற்பாட்டை பூரணியிடம் கூறிய போது, 'நான் உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் உங்களுக்கு அதிக உதவிகளில்லை. உங்கள் உதவிகளை நான் அதிகமாக அடைந்து கொண் டிருக்கிறேன். என்னுடைய வாழ்வே ஒரு நோய் போல் ஆகிவிட்டது" என்று அவர்களிடம் ஏங்கிச் சொன்னாள் அவள். குரல் தளர்ந்திருந்தது. தொண்டை கட்டியிருந்ததனால் உடைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/228&oldid=555951" இலிருந்து மீள்விக்கப்பட்டது