பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 229

எங்களுக்கு எழுது. பணம் வேண்டுமானாலும் ஒரு வரி கடிதம் எழுதினால் உடனே அனுப்புகிறோம். எழுதிக் கேட்பதா என்று கூச்சபட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிடாதே."

'அக்கா உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிக் கை கூப்பினான் முருகானந்தம்.

'அந்தக் குடிசை உதவி வேலையை உடனே தொடங்கி விடுங்கள் அரவிந்தன். வசூல் ஆன தொகையைக் கண்ட ஆட்களிடம் கொடுத்து ஏழைகளை ஏமாற விட்டுவிடாதீர்கள். நீங்களும் முருகானந்தமும் கூட இருந்து செய்யுங்கள். இந்தச் சமயத்தில் இங்கே உங்களோடு கூட இருந்து அந்தப் பொதுத் தொண்டில் நானும் ஈடுபட முடியாமல் இப்படி எங்கோ புறப் பட்டுப் போகிறேனே என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது' என்று நினைவு படுத்தினாள் பூரணி.

'நீ உடனிருந்து செய்யா விட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப் பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது' என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன்.

பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கோடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கோடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேஸ்வரி அம்மாள். அம்மைய நாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களை யெல்லாம் ஊடுருவிக்கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப் பகுதியில் ஏறுவதற்கு முன்னால் ஒரிடத்தில் ஆற்றின் கரை யோரமாக ஒரு தோப்பில் இறங்கி உணவை முடித்துக் கொண் டார்கள். உணவை முடித்துக் கொண்டதும் அவர்கள் மறுபடியும் தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.

வளைந்து, நெளிந்து, முடிவற்று, ஊர்ந்து கொண்டிருக்கும் கருநாகம் போன்ற மலைப்பாதையில் கார் ஏறியது. பாதையின் இருபுறமும் எதேச்சையாய்க் கவனிப்பாரற்றுக் கிடக்கும் செல்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/231&oldid=555954" இலிருந்து மீள்விக்கப்பட்டது