பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 237

'சத்தியமாகச் சொல்கிறேன் அரவிந்தன், எனக்கு ஒரு வம்பும் தெரியாது. அந்தப் பெண்ணாகத் தான்...'

டேய் டேய் சத்தியம் என்கிற வார்த்தை ரொம்பவும் பெரிது. அதை இங்கே இழுக்காதே. இது சாதாரண காதல் விவ காரம்' என்று வேடிக்கை பண்ணினான் அரவிந்தன். முருகானந்தம் சிரித்துக் கொண்டே தலை குனிந்தான்.

'ஒகோ! அப்படியா சங்கதி பதில் எழுதி விட்டாயோ, இல்லையோ'

எழுதி விட்டேன் என்பது போல் தலையாட்டினான் முருகானந்தம். அரவிந்தன் சிரித்தவாறே மேலும் கூறினான்.

'இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது, அப்பனே! சினிமா வம்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு வரத் திருச்சி போய்த் திரும்பின அன்றிலிருந்தே நீ தானப்பமுதலித் தெருவுக்கு அடிக்கடிப் போகத் தொடங்கிவிட்டாயே; அந்த அம்மா ஏதோ தைப்பதற்குத் தருகிறேன் என்று வரச் சொன்னதாக அல்லவா போய் கொண்டிருந்தாய்? இதுதானா அந்தத் தையல் வேலை.'

'இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்' என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந் தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம்.

'இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவிநிதிகள் - இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாயே?’ என்று அவனைக் கேலி செய்து அனுப்பிவிட்டு மனம் தாங்க முடியாத வியப்புடன் அச்சகத் திற்குச் சென்றான் அரவிந்தன். உண்மையிலேயே இது மிகவும் வியப்புத் தரும் செய்தியாகத் தான் இருந்தது அவனுக்கு. முருகானந்தத்திடம் கிண்டலும் வேடிக்கையுமாகப் பேசி அனுப்பி விட்டாலும் பொறுப்புணர்ச்சியோடு நினைத்துப் பார்த்த போது பயமாகவும் மலைப்பாகவும் இருந்தது அரவிந்தனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/239&oldid=555962" இலிருந்து மீள்விக்கப்பட்டது