பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - குறிஞ்சிமலர் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண் களுக்கு வந்து விடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்து விட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்து விட்டுப் போயிருந்தார்.

மணி ஒன்பதரை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக் கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்தது போல் வாயிற்படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள். -

'ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?" -

மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும் சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டு விட்டாள்.

'ஓ! பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா? இரு பார்க்கிறேன். குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணிய தில் ஏழரை ரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு ரூபாயை அவனிடம் கொடுத்து, 'சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு' என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் வருகிறோம் அக்கா!' என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடசிை நாணயமான அந்த எட்டனாவைப் பெட்டிக் குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்பு தான் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/24&oldid=555748" இலிருந்து மீள்விக்கப்பட்டது