பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 குறிஞ்சிமலர்

சார், பசி பொறுக்க முடியவில்லை! தனது இடது கையால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலது கையை நீட்டினான் அவன். ஜிப்பா பையில் கையை விட்டு முழு ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் வைத்து "ஏதாவது வாங்கிச் சாப்பிடு, அப்பா!' என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தான் அரவிந்தன். தன்னையே அந்த இளைஞனின் நிலையில் வைத்து எண்ணிப் பார்த்து வருந்தினான் அவன். 'மீனாட்சி அச்சகமும், கருணையும் பெருந்தன்மையும் உள்ள அதன் உரிமையாளரும் தடுத்தாட் கொண்டிருக்காவிட்டால் தானும் இப்படி ஏதாவது ஒரு பெரிய நகரத்தின் புழுதி படிந்த தெருக்களில் வயிற்றுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டி யவன் தானே என்பதைச் சிந்தித்தபோது மேலும் நெகிழ்ந்து குழைந்தது அவன் உள்ளம்.

கையில் தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்கள் கனத்தைவிட மனத்தில் அதிகமாகக் கனத்த சிந்தனையோடு அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். அச்சகத்து வேலைநேரம் முடிந்து வேலைக்காரர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந் தார்கள். -

'நீங்க தமிழ்ச் சங்கத்துக்குப் புறப்பட்டுப்போனப்புறம் 'ஐயா வந்தாருங்க. இப்போ கீழாவணி மூலiதிப் பேப்பர்க் கடைக்குப் போயிருக்காரு. நீங்க வந்தால் உங்களை எங்கேயும் வெளியே போய்விடாமல் இங்கேயே இருக்கச் சொன்னாரு; உங்க கிட்ட ஏதோ முக்கியமான சங்கதி கலந்து பேசனுமாம்' என்று அச்சகத்து ஊழியன் (ப்யூன்) அரவிந்தனிடம் வந்து சொன்னான். அப்போது அரவிந்தனுடைய மனத்தை ஆட்சி புரிந்து கொண் டிருந்த எண்ணங்களெல்லாம் தெருவில் சந்தித்த இளைஞனைப் பற்றியதாக இருந்தது. அதிலிருந்து தற்காலிகமாகத் தன்னை மீட்டுக்கொண்டு, "நான் இங்கேதானப்பா இருக்கப் போகிறேன். இன்றைக்கு வெளியில் எங்கும் போகப் போவதில்லை. நீ உள் பக்கம் போய் அங்கே நம் திருநாவுக்கரசு இருந்தால் நான் கூப்பிட்டேனென்று வரச்சொல்' என்று ஊழியனிடம் சொல்லி அனுப்பினான் அவன். சிறிது நேரத்தில் பூரணியின் தம்பி திருநாவுக்கரசு வந்து நின்றான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/242&oldid=555965" இலிருந்து மீள்விக்கப்பட்டது