பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 243

பரபரப்போடு பலப்பல தவறுகளைச் செய்து இரவும் பகலும் பாழாக்கித் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சிந்தனை யில்லாமல் கோவில் காளைகள் போல் திரிகிற இந்த விடலைக் கும்பல் எந்த வழியால் உய்யப் போகிறது? இவர்களைத் திருத்துவதற்கு மகாத்மாக்கள் பிறக்க வேண்டும் வெறும் மனிதர்களால் முடியாது; மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பதவியுடையவர் வாரத்துக்கு ஒரு முறைதான் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். மாதம் முப்பது ரூபாய் வாங்குகிற கூலியாள் வீட்டில் மனைவியும் குழந்தையும் பட்டினி கிடக்க ஒரே படத்துக்கு ஏழு தடவைகள் போகிறான். கலைகள் மனிதர்களை ஏழையாக்கிப் பிச்சையெடுக்க வைக்கலாகாது. சமூகத்தில் செழிப்பும், செல்வமும் பொங்குவதற்குத் துணை நிற்க வேண்டிய கலைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற கொடுமை எவ்வளவு பயங்கரமாக வளர்ந்து விட்டது? அப்போதே அந்த வாலிபனிடம் ஒரு ரூபாயை முழுசாகத் தூக்கிக் கொடுத் திருக்கக் கூடாது. நானே ஒட்டலுக்குக் கூட்டிப்போய்ச் சாப்பாடு பண்ணி அனுப்பி வைத்திருக்க வேண்டும்; பரவாயில்லை. எனக்கு இதுவும் ஒரு பாடம்தான். சுலபமாக நம்பி ஏமாறதபடி என்னை நான் விழிப்பாக வைத்துக்கொள்வேன் இனி மேல்.’ என்று நினைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு திரும்பி வருவதைத் தவிர அரவிந்தனால் வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை. அச்சகத்தில் போய் உட்கார்ந்து புத்தகப் பார்சலோடு கிடைக்குமாறு தனித் தபாலில் பூரணிக்கு ஒரு கடிதமும் எழுதினான். முருகானந்தம் - வசந்தா கடிதத் தொடர்பு வேறு அவன் மனத்தை உறுத்திச் சந்தேகங்களைக் கிளப்பிக்கொண் டிருந்தது. ஆயினும் அதுபற்றி அவன் பூரணிக்கு ஒன்றும் எழுதவில்லை. மீனாட்சிசுந்தரம் ஏதோ முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டுமென்று தன்னை இருக்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே! அது என்ன விஷயமாக இருக்குமோ, என்னும் சந்தேகங்களைப் பின்னலாயிற்று அவன் மனம். -

அரவிந்தன் மீனாட்சிசுந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாள் வந்தாள். இரண்டு மூன்று முக்கியமான கடிதங்கள் மங்கையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/245&oldid=555968" இலிருந்து மீள்விக்கப்பட்டது