பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 குறிஞ்சிமலர்

ரோஜாப் பூ மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். 'இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு தொழிலாளர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன்; தொண்டை வறண்டு போச்சு' என்று அரவிந்தன் மட்டும்தான் அங்கிருப்பான் என்னும் எண்ணத்தில் இரைந்து கூறிக்கொண்டே உள்ளே நுழைந்த முருகானந்தம் மீனாட்சி சுந்தரம் இருப்பதைக் கண்டு கூச்சமடைந்தான்.

'வா தம்பி! நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உனக்கு ஆயுசு நூறு இப்போதுதான் சற்றுமுன் அரவிந்தனிடம் உன்னைப் பற்றிச் சொல்லிக் கெண்டிருந்தேன்' என்று அவரே தாராளமாக வரவேற்ற பின்புதான் முருகானந்தம் கூச்சம் தணிந்து இயல்பு நிலையை அடைந்தான். தன்னுடைய கோடைக்கானல் கடிதப் போக்குவரவு விவகாரத்தை மீனாட்சிசுந்தரம் வரை எட்டவிட்டு அவரையும் கூப்பிட்டு வைத்துக்கொண்டு தன்னை விசாரிக்க அரவிந்தன் காத்திருக்கிறானோ என்னும் தயக்கமும் முருகானந் தத்தின் கூச்சத்துக்கு ஒரு காரணம். அப்படி இல்லை என அப்போதே தெரிந்தது. 'இப்போது அவசரமில்லை. அரவிந்தன் உனக்கு நிதானமாக யோசிக்கக் கொஞ்சநேரம் தருகிறேன். நீ இந்தத் தம்பியையும் கலந்து சிந்தித்துக் கொண்டு நாளைக்குக் காலையில் எனக்கு முடிவு சொன்னால் போதும். அப்புறம் உன்னையே கோடைக்கானலுக்கு அனுப்புகிறேன். பூரணியையும் ஒரு வார்த்தை கேட்டுத் தெரிந்து கொண்டு வந்துவிடலாம். எனக்கு வீட்டுக்குப் போக நேரமாயிற்று. நான் வருகிறேன். காலையில் பார்க்கலாம்' என்று அவர்கள் இருவரையும் தனிமை யில் அங்கு விட்டுக் கிளம்பினார் மீனாட்சிசுந்தரம். அவரை வழி யனுப்பும் பாவனையில் எழுந்திருந்த அரவிந்தனும் முருகானந்த மும், வாயில்வரை உடன் போய்விட்டுக் கார் புறப்பட்டதும் உள்ளே திரும்பி வந்தார்கள். திரும்பியதும் கன்னத்தில் கையூன்றியபடி முகத்தில் தீவிர சிந்தனையின் சாயல் தெரிய நாற்காலியில் சாய்ந்தான் அரவிந்தன். அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் புரியாமல் முருகானந்தம் 'என்னப்பா இது? கப்பல் கவிழ்ந்து போன மாதிரி கன்னத்தில் கையூன்றிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/252&oldid=555975" இலிருந்து மீள்விக்கப்பட்டது