பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 269

நூலின் கடைசிப் பக்கத்தில் கருத்தெல்லாம் அவள் ஒன்றிப் போய் ஈடுபட்டிருந்த போது வாசலில் தந்தி பியூன் குரல் கொடுத்தான். வசந்தா ஒடிப்போய் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு வந்தாள். 'ஒரு முக்கியமான காரியமாக அவளைச் சந்தித்துப் பேசுவதற்கு மறுநாள் அரவிந்தனை அனுப்புவதாக" மீனாட்சிசுந்தரம் தந்தி கொடுத்திருந்தார்.

தன்னுடைய நினைவுகளுக்கு ஏதோ மந்திரசக்தி ஏற்பட்டு விட்டது போல் வியப்பாயிருந்தது பூரணிக்கு. எவருடைய வரவை அவள் விரும்பினாளோ அவர் தானாகவே வருகிறார். தனக்காகவே நேருகிறதா இந்த அற்புதமெல்லாம் என்று கருதிக் களித்தாள் அவள். இரவெல்லாம் கனவுகளில் நீந்தினாள். - பூரணி மறுநாள் காலையில் சீக்கிரமே நீராடிவிட்டு வாயிற்புறமாகக் கார் வருகிற சாலைக்கு நேரே புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அரவிந்தனுடைய வரவுக்காகவே அன்று கோடைக்கானல் அவ்வளவு அழகாக இருக்கிறதோ என்று அவள் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று. அன்று அவள் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். தலை பின்னி மல்லிகைப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். இந்த அழகு அலங்கார ஆசைகளெல்லாம் சாதாரணப் பெண்களுக்கு அசட்டுத்தனமாக உண்டாவது போல் தனக்கும் உண்டாகி விட்டதே! என்று நினைக்கும்போதே அவளுக்குக் கூச்சமாக இருந்தது. ஆனால் ஏனோ அன்று அப்படியெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. நீலமேக நிறத்தில் வெள்ளைப் பூப்போட்ட கைத்தறிப் புடவை ஒன்றைத் தழையத் தழையக் கட்டிக் கொண்டு தோகையை விரித்துக் கொண்டிருக்கும் மயில் போல் வீற்றிருந்தாள் பூரணி.

பதினொரு மணிக்கு அச்சக அதிபர் மீனாட்சி சுந்தரத்தின் கார் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தது. -

கைகளில் வளையல்களும், மனத்தில் குதூகலமும் பொங்க எழுந்து நின்றாள் பூரணி, கண்கள் அந்த முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு அகன்று விரிந்தன. இதழ்களில் அரவிந்தனுக்காகவே இந்தச் சிரிப்பை சிரிக்க வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/271&oldid=555994" இலிருந்து மீள்விக்கப்பட்டது