பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 குறிஞ்சிமலர்

சிரித்ததுபோல் ஒரு மோகனச் சிரிப்புடன் காரருகே சென்றாள். அவள். மனம் ஆவலினால் வேகமாக அடித்துக் கொண்டது. நெஞ்சுக்குள் கள்ளக் குறுகுறுப்பு ஐஸ் கட்டியை ஒளித்து வைத்தது மாதிரி பனி பரப்பிற்று. r

காரிலிருந்து மீனாட்சி சுந்தரம் இறங்கினார். முருகானந்தம் இறங்கினார்; அரவிந்தன், வரவில்லை! அவளுடைய நெஞ்சில் மலர்ந்திருந்த ஆசைப் பூக்கள் உதிர்ந்தன. ஏமாற்றத்தால் வந்தவர்களை 'வா என்று சொல்லாமல் இருந்துவிடலாகாதே என்பதற்காக 'வாருங்கள் என்று சிரிக்க முயன்றவாறு அவர்களை வரவேற்றாள். 'உடம்பெல்லாம் சரியாக இருக்கிறதா?’ என்று விசாரித்த மீனாட்சிசுந்தரத்தினிடம், ' உங்களோடு அரவிந்தன் வரவில்லையா? அவர் வருவதாக அல்லவா நேற்றுத் தந்தி கொடுத்தீர்கள்!' என்று அடக்க முடியாமல் கேட்டு விட்டாள் அவள் -

வரவில்லை. இன்று காலையில் அவன் அவசரமாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் போகும்படி நேர்ந்து விட்டது. உள்ளே வா! விவரம் சொல்லுகிறேன்' என்றார் மீனாட்சிசுந்தரம்.

21

நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும் கனற்புகைய வேகின்றான்.......... -

- - - - - புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்த மும்தான் கோடைக்கானலுக்குப் புறபடுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது.

அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக்கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லா விட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத் தான் அவர்கள் உறவினர்கள். உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள். அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/272&oldid=555995" இலிருந்து மீள்விக்கப்பட்டது