பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

"தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"

- பரிபாடல் குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் தானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியபோது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத் தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுகதுக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்த போது உண்டு, நினைத்த போது உறங்கி; அந்த வினாடிகளை அந்தந்த விநாடிகளோடு மறந்து போகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அநுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள் தாமா!

பூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டு விட்டுப் போய்விட்ட மாதிரித் தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோவிலும் மூடிவிடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூடத் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது.

பூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக் கொண்டு திரும்பினாள். எங்கோ கோவில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/28&oldid=555752" இலிருந்து மீள்விக்கப்பட்டது