பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 - குறிஞ்சிமலர் 'நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!. என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்கவேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய முடிந்தது. இந்த உறவை மங்களேஸ்வரி அம்மாள் எப்படி வரவேற்பார்கள்?’ என்ற கவலையில் மூழ்கிற்று அவள் மனம். 'முருகானந்தம் தங்கமான பிள்ளைதான். ஆனால் செல்வக் குவியலின் மேல் வாழும் வசந்தாவின் குடும்பமும், முருகானந்தத் தின் ஏழைக் குடும்பமும் எப்படி ஒட்டுறவுபெறமுடியும்?' என்று தயங்கிற்று பூரணியின் மனம் கதைகளில் நம்பமுடியாதது போலப் படிக்க நேர்கிற நிகழ்ச்சி ஒன்றைத் திடீரென்று வாழ்க்கையில் கண்ணெதிரே சந்தித்து விட்டாற் போலிருந்தது பூரணிக்கு. மனங்கள் நெகிழ்ந்து ஒன்று சேர்வதே ஒரு வகையில் தற்செயலாகவும் Q நிகழ்கிற நிகழ்ச்சியாகப் பட்டது அவளுக்கு. முதல் நாள் காலையில் தன்னுடைய உள்ளத்தில் தவிர்க்கமுடியாத வகையில் அரவிந்தனைப் பற்றிய நினைவுகள் உண்டானதையும் எண்ணினாள். பெண்கள் மிக விரைவாக மனம் நெகிழ்ந்து விடுவது அவர்கள் குற்றமில்லை, நெகிழ்வதற்கென்றே 'நீ எங்களைப் போன்ற மெல்லியவர்களின் மனங்களைப் படைத்திருக்கிறாய். இறைவா அல்லது நெகிழச் செய்வதை இயல்பாகப் படைத்திருக்கிறாய்!” என்று நினைத்தாள் அவள். பத்து நிமிடங்களில் தந்தி கொடுத்து விட்டுத் திரும்பி வந்து விட்டார் மீனாட்சிசுந்தரம்.

எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிட உட்காரலாமென்று வசந்தாவையும், முருகானந்தத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந் தாள் பூரணி. சிறிதுநேரத்தில் சிரிப்பும் கும்மாளமுமாகப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

"இவர் இதற்கு முன்னால்கோடைக்கானலுக்கு வந்ததில்லை யாம் அக்கா அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/292&oldid=556015" இலிருந்து மீள்விக்கப்பட்டது