பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 ಅಟ್ರäæ9)i நான் என்னப்பா செய்வது? பேச்சுத்துணைக்கு வேறு ஆள் இல்லை. தனியாகப் போவதற்கு என்னவோ போலிருக்கிறது. உன் கொள்கையைப் பலாத்காரமாக மாற்றி விட்டேனே என்று என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே' என்று சிரித்து மழுப்ப முயன்றார் அந்தக் கிழவர். பதுங்கிப்பம்மிப் பாயவருகிற காலத் தில் வேங்கைப் புலியின் முகத்தில் தோன்றுகிற தந்திரமும் குரூர மும் இணைந்த சாயலைக் கண்டிருந்தால் அந்தக் கிழவரின் முகத் தைக் காணவேண்டிய அவசியமில்லை. அதே சூழ்ச்சிக்களை யோடு கூடிய முகம்தான் அவருக்கும் வாய்த்திருந்தது. மதுரையில் அவரோடு நெருங்கிப்பழகுகிற வாய்ப்பு அரவிந்தனுக்கு ஏற்பட்டிராவிட்டாலும் அவரைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்தான். சிறுவயதிலிருந்தே ஊர் உறவுகளிலிருந்து விலகி அநாதை வாழ்க்கை வாழ்ந்து விட்டதனால் அவனுக்குத் தன்னுர் ஆட்களிடம் பழக்கமே இல்லை. அதிலும் இப்போது முதல் வகுப்பில் அவனோடு வந்துகொண்டிருக்கிற இந்த மனிதர் சிறுவயதிலேயே ஊரைவிட்டு, நாட்டை விட்டு பர்மாவுக்குப் போய் வட்டிக்கடை வைத்துப் பணம் திரட்டிக் கொண்டு திரும்பி வந்தவர். திரும்பி வந்தபின் கிராமத்துக்குப் போகாமல் பலவிதமான வாழ்க்கை வசதிகளுக்காக மதுரையிலே பங்களா கட்டிக்கொண்டு குடியேறிவிட்டார். அவருடைய சொந்தப் பெயரைச் சொன்னால் மதுரையில் தெரியாது. பர்மாக் காரர் என்றால் நன்றாகத் தெரியும். வாலிப வயது முடிந்து நடுத்தரப் பருவத்தையும் கடந்து முதுமையை எட்டப்போகிற தருணத்தில் விநோதமான விதத்தில் அவர் பர்மாவிலிருந்து திரும்பியிருந்தார். -

வட்டிக்கடை வைத்துச் சேர்த்த பணமும் பகட்டும், வாழ்ந்து சோர்ந்திருந்த முதுமையும் மட்டுமின்றிப் பச்சைக் கிளிபோல் எழில் கொஞ்சும் பர்மியப்பெண் ஒருத்தியையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார் அவர். பர்மாவுக்குப் போகும்போது ஒற்றைக்கட்டையாகப் போனவர் அவர். அதற்காக எப்போதும் ஒற்றைக்கட்டையாக இருக்க வேண்டுமா என்ன? சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்குகிற போது எத்தனையோ நினைவுகள் தானாகவும் எளிதாகவும் நிறைவேறிவிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/298&oldid=556021" இலிருந்து மீள்விக்கப்பட்டது