பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 297 உள்ளத்தைப் பித்துக்கொள்ளச் செய்யும் வனப்பு வாய்ந்த பர்மியப் பெண்களின் அழகில் மயக்கமும் சபலமும் கொண்டு ஏங்கிய நாட்கள் அவருடைய பர்மா வாழ்வில் அதிகமானவை. கடைசி யில் தாயகம் திரும்புவதற்கு முந்தின ஆண்டில் அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது. தம்முடைய வயதில் மூன்றில் ஒரு பங்கு வயதுகூட ஆகாத ஒரு பர்மியப் பெண்ணை அவர் மணந்து கொண்டார். அனுமதியும் பெற்றுத் தம்மோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டார். விளையாடுவதற்குப் பிரியமான பொம்மை வாங்கிக் கொண்டு வந்ததுபோல் களிப்புடன் வந்தார் அவர் கொள்ளக் குறையாத செல்வத்தையும் கொள்ளை அழகு கொஞ்சும் மனைவியையும் இட்டுக்கொண்டு மதுரை திரும்பிய பின் அவருக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய யோகங்கள் அடித்தன. பொது வாழ்வில் பல நண்பர்களும் சங்கங்களும் சேர்ந்து அவரைப் பெரிதுபடுத்தினர். பிரமுகராக்கினர். செல்வாக்கும் புகழும் அரசியலுக்கு அழைத்தன. அதிலும் நுழைந்து பதவியும் பகட்டுமாக வாழ்ந்தார் பர்மாக்காரர்.

மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லா குளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதுரருக்கும் அப்பால் அழகர் கோவில் போகிற சாலையருகே அரண்மனைபோல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடுபோல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம், பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர்போலப் பெரிய காம்பவுண்டுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனி "எஸ்டேட் ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் பர்மாக்காரர் எஸ்டேட்' என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பர்மாவிலிருந்து வந்து இறங்கியபோது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருந்தது உண்மைதான்! ஆனால் பணம் என்பது ஒரு பெரிய பக்கபலமாக இருந்து அவரை மதிக்கவும், பெரிய மனிதராக எல்லோரும் அங்கீகரித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/299&oldid=556022" இலிருந்து மீள்விக்கப்பட்டது