பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 - குறிஞ்சி மலர் நாலு பிரஸ் வைத்து நடத்துகிற வளமை உனக்கு வந்தாச்சு. இனிமேல் எதுக்கு அந்தப் பொறுக்கிப் பயல் வேலை? என்ன? நான் சொல்வது சரிதானே? என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தார் பர்மாக்காரர். அவன் கார் சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கூறியதை இலட்சியம் செய்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

கார் வையைப் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாலத்தின் மேல் போக நேர்கிற போதெல்லாம் அரவிந்த னுக்கு ஒரு விந்தையான சிந்தனை உண்டாகும். இந்தப் பாலம் இலட்சாதிபதிகளும், பங்களாவாசிகளும் நிறைந்த வடக்கு மதுரையையும் சாதாரண மக்களின் நெருக்கடி நிறைந்த தெற்கு மதுரையையும் இணைக்கிறது. ஆனால் இந்த இரண்டு மதுரை களின் மண்தான் இணைகிறதே ஒழிய மனம் இணைய வில்லை. அதற்கு வேறொரு புதிய பாலம் போட வேண்டும். அது பண்பாட்டுப் பாலமாக இருக்கும் என்று எண்ணுவான்.

அமெரிக்கன் கல்லூரியின் சிவப்பு நிறக் கட்டிடங்கள், தல்லாகுளம் பெருமாள் கோவிலின் பட்டையடித்த மதிற்கவர் எல்லாவற்றையும் வேகமாகப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு கார் விரைந்தது. எதிரே நீலவானத்தின் சரிவில் மங்கிய ஓவியம்போல் அழகர் மலைக் குன்றுகள் தெரிந்தன.

கார் பர்மாக்காரர் எஸ்டேட்'டில் நுழைந்தது. அரவிந்தன் மலைத்துப் போனான். அப்பப்பா? எத்தனை அழகான இடம்? எவ்வளவு பெரிய தோட்டம் எத்தனை விதமான பூந்தொட்டிகள் எவ்வளவு பெரிய மாளிகை ஒரு பெரிய ஊரையே குடி வைக்கலாம். அவ்வளவு விரிவான நிலப்பரப்பில் தோட்டமும் மாளிகையும் அமைந்திருந்தன.

சிற்றுண்டி, தேநீர் உபசாரமெல்லாம் பிரமாதமாக நடந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட எழுந்தான் அரவிந்தன். - -

"என்னப்பா பறக்கிறாய்? இனிமேல் நாளைக் காலையில் தானே கோடைக்கானல் போகப் போகிறாய் உன்னை என் நண்பர் ஒருத்தருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/304&oldid=556027" இலிருந்து மீள்விக்கப்பட்டது