பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 303 இரப்பா, அந்த நண்பருக்கு டெலிபோன் செய்து வரவழைக் இறேன் என்று யாருக்கோ டெலிபோன் செய்தார் பர்மாக்காரர். அவர் டெலிபோனில் பேசிய விதம் கண் சிமிட்டிக்கொண்டே கள்ளச் சிரிப்புச் சிரித்த விதம், எல்லாமாகச் சேர்ந்து மொத்தமாக அரவிந்தன் மனத்தில் ஏதோ ஒரு சந்தேகத்தைக் கிளப்பின. சிறிது சிறிதாக அவருடைய அந்தப் புலிமுகம் உண்மையாகவே புலிமுகமாய் மாறிக் கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. நீ ஏதோ வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறாய்' என்பது போல் அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.

'மதுரை மீனாட்சி கோவிலில் வடக்குக் கோபுரத்தின் உட்பக்கம் சில தூண்கள் இருக்கின்றன. அவற்றுக்கு இசைத் தூண்கள் என்று பெயர். அந்தத் தூண்களுக்கு அருகில் நெருங்கி அவற்றைத் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி கேட்கும். அதேபோல் அருகில் நெருங்கி இதயத்தைத் தட்டிப் பார்க்கும் போதல்லவா மனித னுடைய சுயமான உள்ளத்தின் ஒலி கேட்கிறது என்று நினைத்து மருட்சியோடு பர்மாக்காரர் எஸ்டேட்டின் மாளிகைக்குள் அவரெதிரே வீற்றிருந்தான் அரவிந்தன். மருட்சி இருந்தாலும் அவன் தைரியத்தை இழந்துவிடவில்லை. -

சிறிது நேரத்தில் அவனுக்காக வரவழைப்பதாக பர்மாக்காரர் டெலிபோன் செய்த நண்பர் வந்து சேர்ந்தார். அந்த ஆளைக் கண்டதும் அரவிந்தன் திகைத்தான். அவர் அவனுக்கு இனிமேல் தான் அறிமுகம் ஆகவேண்டிய ஆள் இல்லை. ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தான். வேறு யாருமில்லை. அன்றொரு நாள் பூரணியின் வீட்டில் அவனைக் கன்னம் சிவக்க அறைந்துவிட்டுப் போனாரே, புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர், அவர்தான் விஷமச்சிரிப்புச் சிரித்துக்கொண்டே வந்து உட்கார்ந்தார். அதன் பின் அங்கு நிகழ்ந்தவையெல்லாம் துப்புறியும் மர்மக் கதைகளில் நடப்பதுபோல் நிகழ்ந்தன. அரவிந்தன் வற்புறுத்தப்பட்டான், பயமுறுத்தப்பட்டான். -

அவர்கள் தன்னிடம் பேசியவற்றிலிருந்து அரவிந்தன் சில உண்மைகளைப் புரிந்து கொண்டான். பர்மாக்காரர் சிற்றப்பாவின் கேதத்துக்கு வந்திருந்தபோது மீனாட்சி சுந்தரம் பூரணியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/305&oldid=556028" இலிருந்து மீள்விக்கப்பட்டது