பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 305

அவர்கள் முகம் சிவக்க அவனை வெறித்து நோக்கினர். பர்மாக்காரரின் முகம் புலிப் பார்வையின் கடுமையில் அதிகமான

இறுதிக் கடுமையை எய்தியது. புது மண்டபத்து மனிதரின் கண்கள் நெருப்புக் கோளங்களாயின. -

'இந்தாப்பா, பலராம்! இந்தப் பையன் ஏதோ முறைத்து விட்டுப் போகிறான். நீ வந்து கொஞ்சம் பையனைக் கவனி" என்று யாரையோகூப்பிட்டார் பர்மாக்காரர். எழுந்து வெளியேறி விட்ட அரவிந்தன் வாயிற்படியிலிருந்து இறங்கி உட்பக்கம் திரும்பிப் பார்த்தான். அரிவாள் நுனிபோல் மீசையும், தடித்த உடம்புமாகக் கொழுத்த மனிதன் ஒருவன், உள்ளேயிருந்து வந்தான். திரைப்படங்களிலும் கதைகளிலும் க்ண்டது வாழ்க்கை யிலும் இப்போது வருவதை உணர்ந்தான் அரவிந்தன். பெரும் புள்ளிகள் இம்மாதிரி அடி ஆட்கள் வைத்திருப்பது பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு.

நெஞ்சின் வலிமைதான் பெரிது என நினைத்திருந்த அவன் முதன் முதலாகத் தன் வாழ்வில் உடம்பின் வலிமையைக் காட்டிப் போராட வேண்டிய சமயம் மிக அருகில் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஜிப்பாவின் கைகளை மேலே மடித்துவிட்டுக் கொண்டான். கவிதைகளையும் புரட்சிக் கருத்துக்கள்ையும் எழுதிய கைகள் போருக்குப் புடைத்து நின்றன.

24

பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்த மேல்பால் திசைப்பெண் புலம்புறுமாலை

-திருவிருத்தம் இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கும் போது ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று.

இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப்போல் இயல்பாகவே

கு.ம - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/307&oldid=556030" இலிருந்து மீள்விக்கப்பட்டது