பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 307

வேகமாக மாளிகை முகப்புக்கு வந்து நின்றது, கண்யமான வர்களாகவும் செல்வம் நிறைந்தவர்களாகவும் தோன்றிய'யாரோ இரண்டு மூன்று பேர்கள் பர்மாக்காரரை நோக்கிக் கைக்கூப்பிக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள்.

அவ்வளவு தான், நாடகத்தில் காட்சி மாறுகிறாற்போல் உடனடியாக அங்கு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. "வரவேணும்! வரவேணும்' என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் வந்தவர் களை எதிர்கொண்டழைக்க ஓடி வந்தார்கள். 'பலராம் உள்ளே போய் அம்மாவிடம் பலகாரத்துக்குச் சொல்லு' என்று தடியனை வேறு காரியத்துக்குத் திருப்பி விட்டார் பர்மாக்காரர். தன்னைப் பற்றி வந்தவர்களுக்கு முன்னால் அரவிந்தன் ஏதாவது கண்டபடி கூச்சல் போட்டு மானத்தை வாங்கி விடப் போகிறான்: - என்ற பயத்தினால் அவரே முந்திக் கொண்டார். ஒன்றுமே நடக்காதது போல் சிரித்த முகத்தோடு அவனை நோக்கி, நீ போய்விட்டு நாளைக்கு வா தம்பி இப்போது நேரமில்லை எனக்கு' என்றாரே பார்க்கலாம்! ஒரே விநாடியில் காட்சியை மாற்றி நடித்து விட்ட அந்தச் சாமர்த்தியத்தை எப்படி வியப்ப தென்றே அரவிந்தனுக்குத் தெரியவில்லை.

அவன் பயத்தையும், வியப்பையும், இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளையும் மனத்தில் சுமந்து கொண்டே அந்திப் பெரிய தோட்டத்திலிருந்து வெளியேறிச் சாலைக்கு வந்தான். சிறிது நேரத்தில் பஸ் வந்தது. கையை நீட்டிப் பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொண்டான். வெளியூரிலிருந்து.மதுரை திரும்பும் பஸ் அது. வையைப் பாலத்து இறக்கத்தில் யானைக்கல்லில் இறங்கிக் கொண்டான் அரவிந்தன். இரவு மணி எட்டுக்கு மேல் ஆகி யிருந்தது. சில்லறை விற்பனைக்காகப் பலாப்பழம், மாம்பழம் முதலிய பழங்களை மொத்தத்தில் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் 'பழக்கமிஷன் மண்டிகள் நிறைந்த யானைக்கல் பிரதேசம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஊரெல்லாம் லாப்பழமும் மாம்பழமுமே நிரம்பிக் கிடப்பதுபோல் அந்தப் புகுதிக்கென்றே ஒருவகைப் பழமணம் சொந்தமாயிருந்தது. பலாப்பழத்தின் உடைந்த சக்கைகளும், அழுகின பழச் சிதறல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/309&oldid=556032" இலிருந்து மீள்விக்கப்பட்டது