பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 313

பெண்ணானால், நீங்கள் இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. இந்த வீட்டிலும், இதன் சுகபோகங்களிலும் என் வயிற்றில் பிறந்த வசந்தாவுக்கும் செல்லத்துக்கும் எத்தனை பாத்தியதை உண்டோ அவ்வளவு உங்களுக்கும் உண்டு. நான் பணத்தோடு பிறக்க வில்லை, நான் பணத்தோடு போகப்போவதும் இல்லை. இப்படியெல்லாம் வாழ நேரும் என்று கனவில் கூடச் சின்ன வயதில் நான் எண்ணியதில்லை. ஏழைக் குடும்பத்திலிருந்து அவருக்கு வாழ்க்கைப்பட்டேன். இலங்கை. மண்ணில் போய் உழைப்பினாலும் முயற்சியாலும் உயர்ந்து இத்தனை பணத்தை யும், இத்தனை துக்கத்தையும், இந்தப் பெண்களையும் எனக்குச் சேர்த்து வைத்துச் சென்று விட்டார் அவர் பணமும் பெருமையும் இருந்து என்ன செய்ய? இந்தப் பெண் வசந்தாவுக்கு ஒரு நல்ல இடம் அகப்படாமல் தவிக்கிறேன் என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

அந்த அம்மாள் கூறியவற்றைக் கேட்டபோது அரவிந்தன் மனம் குழைந்தான். அந்த அபூர்வமான அன்பும் பாசமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. பர்மாக்காரர் போல் இதயமே இல்லாத வர்கள் வாழ்கிற உலகத்தில் இவ்வளவு அற்புதமான பெருமனம் படைத்த இந்தத் தாயும் அல்லவா இருக்கிறாள்' என்று நினைத்தான் அவன். முருகானந்தம் - வசந்தா தொடர்பை அந்த அம்மாளிடம் குறிப்பாகச் சொல்லி சம்மதம் பெறவேண்டிய சமயம் அதுதான் என்று அரவிந்தனுக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் பரந்த மனம் அந்த மணத்தை மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் என்று அவன் உள்ளம் உறுதியாக நம்பியது. அரவிந்தன் அந்த அம்மாளிடம் கேட்டான். r

'அம்மா! உங்கள் பெண் வசந்தாவின் திருமணத்துக்காகச் சிரமப்படுவதாகக் கூறுகிறீர்களே! சிரமப்பட வேண்டிய காரணம் என்ன?"

'உங்களுக்குத்தான் தெரியுமே அசட்டுத்தனமாகச் சினிமா வில் சேர்கிறேன் என்று போய் எவனுடனோ அலைந்து விட்டு ஏமாந்து திரும்பினாள். ஊரில் அது கை, கால் முளைத்து தப்பாகப் பரவியிருக்கிறது. பெண்ணின் தூய்மையில் நமக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/315&oldid=556038" இலிருந்து மீள்விக்கப்பட்டது