பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 குறிஞ்சிமலர் திரும்பவில்லையாதலால் அன்று தேர்தல் பற்றி முடிவு செய்ய வில்லை அவர்கள். அவருடைய வரவை எதிர்பார்த்தனர்.

அன்று மாலையில் முருகானந்தமும், மங்களேசுவரி அம்மாள், வசந்தா, குழந்தைகள் எல்லோரும் ஏரிக்கரைக்கு உலாவப் போயிருந்தார்கள். அரவிந்தனும் பூரணியும் மட்டும் தமிழ் முருகன் கோவில் கொண்டிருக்கும் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். மாலை நேரத்தில் மலைச்சாலையில் நடப்பது இன்பமாக இருந்தது.

பகல் என்னும் கணவனை இழந்த மாலை என்னும் மேல்திசைப் பெண், பால்வடியும் வாயையுடைய பிறை என்னும் பிள்ளையை இடுப்பில் ஏந்தி நின்று, விதவைக் கோலத்தில் புலம்புகிறாற்போல் தோன்றும் மாலைப் போதாக இருந்தது அது. கோடைக்கானலுக்கு வந்தபின் பூரணியின் நிறம் வெளுத்திருப்பதாகவும் அழகு அதிகமாயிருப்பதாகவும் அரவிந்த னுக்குத் தோன்றியது.

'அலைச்சல் அதிகமோ? நீங்கள் கருத்திருக்கிறீர்களே! என்றாள் பூரணி. ஆமாம்!' என்று புன்முறுவல் பூத்தான் அரவிந்தன். -

'முன்பு ஒரு முறை நாமிருவரும் திருப்பரங்குன்றம் மலை. யில் ஏறியது நினைவிருக்கிறதா உங்களுக்கு? நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்லுகிறோம்! இல்லையா? அரவிந்தனுக்கு மெய் சிலிர்த்தது. எத்தனை அர்த்தம் நிறைந்த கேள்வி இது? நாங்கள் இருவரும் உயர உயரப் போவதற்காகவே பிறந்தவர்களா? . மீண்டும் சிலிர்த்தது அவனுக்கு.

25

பொன்காட்டும் நிறம்காட்டிப்

பூக்காட்டும் விழிகாட்டிப் பண்காட்டும் மொழிகாட்டிப்

பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/320&oldid=556043" இலிருந்து மீள்விக்கப்பட்டது