பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 குறிஞ்சி மலர்

கூச்சத்தோடு நழுவ முயன்ற முருகானந்தத்தை இழுத்து வந்து, "இவன்தான் அம்மா உங்க மாப்பிள்ளை சந்தேகமிருந்தால் உங்கள் பெண்ணையே ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்' என்று அரவிந்தன் கூறியபோது வசந்தா சிரிப்பும் நாணமும் நிறைந்த முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு உள்ளே எழுந்து ஓடிவிட்டாள். திடீரென்று ஆரம்பமாகிய அந்த நாடகத்தைக் கண்டு திணறி வெட்கப்பட்டுப்போனான் முருகானந்தம். வசந்தா அறைக்குள்ளிருந்தே ஒட்டுக் கேட்டுப் பூரித்துக் கொண்டி ருந்தாள். -

'திருப்பரங்குன்றம் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி விடலாம்" என்று மீனாட்சி சுந்தரம் கூறியதை மங்களேசுவரி அம்மாள் ஒப்புக் கொள்ள வில்லை.

'மூத்த பெண்ணின் கல்யாணம் வீட்டிலேயே நடக்க வேண்டும். ஏனோ தானோ என்று கோவிலில் நடத்தி முடிக்க மாட்டேன். இலங்கையிலிருந்து மதுரை வந்தபின் வீட்டில் ஒரு சுபகாரியமும் நடக்கவில்லை. இந்தக் கல்யாணத்தை என் வீட்டில் தான் செய்யப் போகிறேன்."

'என்னடா முருகானந்தம் உனக்குச் சம்மதந்தானே?" என்றான் அரவிந்தன். அப்போது முருகானந்தத்தின் முகம் அற்புதமாய்ச் சிரித்தது.

'திருமணத்துக்காக வசந்தாவுக்குத் தைக்கும் புதுத் துணிகளை மட்டும் முருகானந்தத்திடம் கொடுத்து விடுங்கள்' என்று கூறி அவன் முகத்தை இன்னும் அற்புதமாய்ச் சிரிக்க வைத்தாள் பூரணி. திருமணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பமானதும் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கே ஒரு புதுக்களையும் மங்கலமும் சேர்ந்துவிட்டாற்போலிருந்தது.

மறுநாள் இலங்கை, மலேயா, கல்கத்தா முதலிய இடங்களி லிருந்து வந்த அழைப்புக்களை ஏற்றுக்கொண்டு சொற் பொழிவுகளுக்குப் போகச் சம்மதம் தெரிவித்து மங்கையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/332&oldid=556055" இலிருந்து மீள்விக்கப்பட்டது