பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 335

'காரணம் என்னவாம்?"

'காரணமெல்லாம் சொல்லிக்கொண்டு நின்று நிதானமாய்ப் பேசவே இல்லை. இப்போது இதற்கு அவசரமில்லை என்று ஒரே வாக்கியத்தில் அவன் பேச்சை முடித்துக் கொண்டு போய்விட்டான்." -

'நீங்கள் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதோ?”

'கேட்டால்தானே சொல்லலாம்.'

"அந்தப் பெண்ணே சம்மதித்த மாதிரிச் சொல்லி விட்டது. அரவிந்தனுக்கு மட்டும் என்ன தடை? இப்போது அரவிந்தன் எங்கே? நான் சொல்லிப் பார்க்கிறேன்.'

'தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டு மானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்' என்று நம்பிக்கை யில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சி சுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்.

அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்த மும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டுபோனாள். முருகானந்தம் மீனாட்சி சுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதை யோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான்.

'உட்கார் தம்பி. உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்" என்றார் மீனாட்சி சுந்தரம்.

"பரவாயில்லை. சொல்லுங்கள் என்று நின்று கொண்டே முருகானந்தம் அவர் கூறுவதைக் கேட்கத் தயாரானான்.

"அரும்பாடுபட்டு ஒரு வழியாக இந்தப் பெண்ணிடம் தேர்தலில் நிற்பதற்குச் சம்பதம் வாங்கிவிட்டோம். நேற்று அரவிந்தன் வந்து சொல்லிய விவரங்களிலிருந்து பார்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/337&oldid=556060" இலிருந்து மீள்விக்கப்பட்டது