பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குறிஞ்சிமலர்

நகைப் பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஒர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை, கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள்.

'அக்கா! உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு! இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கனும்' என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்!

'ஆகட்டும், மங்கை தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப் பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக் கிறது. உன்னை ஒது வார் தாத்தா வீட்டிலே விட்டு விட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிகூடத்திலேயிருந்து வரவரைக்கும், அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக் கூடாது; அழவும் கூடாது." நானும் உங்க கூட மதுரைக்கு வரேனக்கா? சொல்லி விட்டுக் குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள்.

'நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்து விடுவேன். ஒதுவார் தாத்தா புதுப்புதுக் கதை எல்லாம் சொல்லுவாங்க; கேட்டுகிட்டு அவங்க வீட்டிலே இரு.' குழந்தை ஒரு வழியாக இருக்க ஒப்புக் கொண்டு விட்டது போல் அடங்கி விட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக் கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/34&oldid=555758" இலிருந்து மீள்விக்கப்பட்டது