பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 குறிஞ்சி மலர்

இதோ இங்கே எனக்கு அருகில்தான் பூத்திருக்கிறது. நேற்று வரை பூத்திருந்தது. இன்று கோபத்தால் கூம்பியிருக்கிறது. அதை மலரச் செய்வதற்காக நான் இங்கே இருக்க வேண்டியது அவசியமா கிறது என்று அரவிந்தன் அழகாகப் பேசிய போது அதை இரசிக்கவோ அதற்காக முகமலர்ச்சி காட்டவோ கூடாதென்று தான் பூரணி எண்ணினாள். ஆனால் அவள் முகம் மலரத்தான் செய்தது. அதில் அவள் அவனுடைய வாக்கியங்கள் இரசிக்கும் குறிப்பும் தோன்றத்தான் தோன்றியது.

'ஆ இதோ என்னுடைய குறிஞ்சி பூத்துவிட்டது' என்று கைகொட்டி நகைத்தான் அரவிந்தன்.

27

மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை எந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்? ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

- பாரதி அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சி சுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்யவேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளி நாட்டுப்பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விரைவு படுத்தினான். அரசினர் அலுவலகங்களில்தான் தொடர்புடையவர்களைப் பார்த்துத் தூண்டிக்கொண்டிருக்கா விட்டால் தானாகவே எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லையே! வெளிநாட்டுப் பயண அனுமதிக்குத் தானே ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கும் தகவல் தெரிவித்து விட்டான் அவன்.

முன்பு பூரணியின் சொற்பொழிவு மூலம் ஏழைகளின் குடிசை - உதவி நிதிக்கு வசூலான தொகையை மிகவும் நம்பிக்கையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/346&oldid=556069" இலிருந்து மீள்விக்கப்பட்டது